கன்னியாகுமரி

மண்டைக்காடு மாசிக் கொடை விழா: 10 நாள்களும் தங்கத் தேர் ஓடும்: பொன்.ராதாகிருஷ்ணன்

DIN

மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் கொடைவிழா நடைபெறும் 10 நாள்களும் தங்கத் தேர் ஓட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார் மத்திய நிதி மற்றும் கப்பல் துறை இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன். 
மண்டைக்காடு மாசிக் கொடை விழாவை முன்னிட்டு, சமய மாநாடு ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.  மாநாட்டை குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்து அவர் பேசியது: மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் மாநாட்டு அரங்கம் அமைக்க, மக்களவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு தற்போது பணிகள் நடைபெற்று வருகின்றன. 
நான்கு வழிச்சாலைப் பணிகள் ஏற்கெனவே நிறைவு பெற்றிருக்க வேண்டும். தற்போது தடைகள் எல்லாம் நீங்கி விட்டன. எனவே 4 வழிச்சாலைப் பணிகள் தொடர்ந்து நடைபெறும். மேலும், ரூ. 4 ஆயிரம் கோடியில் இரட்டை ரயில் பாதை, துறைமுகம் பணிகள் போன்றவையும் உறுதியாக நடைபெறும்.
நாம் செயல்படுத்தும் திட்டங்கள் எதிர்கால சந்ததியினருக்கும் பலன் அளிக்கும் வகையில் இருக்கும்.  இதன் மூலம் நமது மாவட்டத்துக்கு வேலைவாய்ப்பு, தொழில்முன்னேற்றம் அதிகரிக்கும். 
மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் தங்கத் தேர் உள்ளது. இந்தத் தேர் திருவிழாவின்போது, 10  நாள்களும் ஓடவேண்டும் என்று நான் முயற்சித்தேன்.  நிகழாண்டு 10 நாள்களும் தங்கத்தேர் ஓடும். இதற்கு அனுமதி அளித்த முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமிக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT