கன்னியாகுமரி

சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயிலில் சித்திரைத் திருவிழா கொடியேற்றம்

DIN


சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயிலில் சித்திரைத் திருவிழா கொடியேற்றம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் மிகவும் பழைமையான பிரசித்தி பெற்ற கோயில்களில் சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயிலும் ஒன்றாகும். இக்கோயிலில் ஆண்டுதோறும் சித்திரைத் திருவிழா தெப்பத் திருவிழாவாக வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. நிகழாண்டுத் திருவிழா ஞாயிற்றுக்கிழமை காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
இத்திருவிழா தொடர்ந்து 14ஆம் தேதி வரை 10 நாள்கள் நடைபெறுகிறது. 6ஆம் தேதி காலையில் விநாயகர் மூஷிக வாகனத்தில் வீதியுலா வருகிறார். காலை 8 மணிக்கு பூங்கோயில் வாகனத்தில் சந்திரசேகரரும், இரவு 9 மணிக்கு புஷ்பக விமானத்தில் சுவாமி - அம்பாளும் வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளிக்கின்றனர்.  
தொடர்ந்து  9ஆம் தேதி வரை திருவாவடுதுறை ஆதீனம் சார்பில் சமய மாநாடு, தேவார பாட சாலை விழா நடைபெறுகின்றன.
11ஆம் தேதி மாலை 4  மணிக்கு நடராஜபெருமானுக்கு திருச்சாந்து உற்சவமும், 5 மணிக்கு ஊஞ்சல் மண்டபத்தில் உற்சவ மூர்த்திக்கு மண்டகப்படியும் நடைபெறுகின்றன. 12ஆம் தேதி காலை 10 மணிக்கும், மாலை 4  மணிக்கும் நடராஜபெருமானுக்கும், சிவகாமி அம்பாளுக்கும் அஷ்டாபிஷேகம், இரவு 7 மணிக்கு சிதம்பரேஸ்வரர் வீதியுலா வருதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. 13ஆம் தேதி காலை 9 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது.
10ஆம் திருநாளான மே 14ஆம் தேதி இரவு 8 மணிக்கு வாண வேடிக்கையோடு தெப்பத் திருவிழா நடைபெறுகிறது. சுவாமி- அம்பாள் தெப்பத்தில் எழுந்தருளி, தெப்பக்குளத்தை 3 முறை சுற்றி வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கின்றனர். தொடர்ந்து சப்தாவர்ணம் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறையினர் மற்றும் கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து தாத்தாவை கொன்ற மாணவர் கைது: தாய் கவலைக்கிடம்

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

SCROLL FOR NEXT