கன்னியாகுமரி

படந்தாலுமூடு சந்தையில் பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்

DIN

படந்தாலுமூடு மீன் சந்தையில், களியக்காவிளை பேரூராட்சி செயலர் அலுவலர் நடத்திய  சோதனையில் தடை செய்யப்பட்ட 7 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
தமிழகத்தில் மறு சுழற்சி செய்யமுடியாத பிளாஸ்டிக் பொருள்களுக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில், குமரி மாவட்டத்தில் இந்த வகை பிளாஸ்டிக் பைகள், பிளேட்டுகள், கப்புகள் உள்ளிட்டவை விற்பனை செய்வதற்கும், பயன்படுத்துவதற்கும் தடை விதிக்கப்பட்டு அதிகாரிகள் மூலம் தீவிர கண்காணிப்பு  நடைபெற்று வருகிறது.இந்நிலையில், படந்தாலுமூடு சந்தையில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்துவதாக தகவல் கிடைத்ததாம். இதையடுத்து, களியக்காவிளை பேரூராட்சி செயலர் அலுவலர் சத்தியதாஸ் தலைமையில் ஊழியர்கள் அங்கு சோதனை செய்தனர். இதில் மீன் வணிகர்களிடமிருந்து 7 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் இந்த வகை பிளாஸ்டிக் பைகளை தொடர்ந்து பயன்படுத்தக்கூடாது என்று எச்சரிக்கையும் விடப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிபிசிஎல் விரிவாக்கப் பணிகளுக்கு எதிா்ப்பு: கிராம மக்கள் உண்ணாவிரதப் போராட்டம்

திருச்சி - தஞ்சை ரயிலை நாகை வரை நீட்டிக்க வலியுறுத்தல்

சாலையில் கண்டெடுத்த நகை உரியவரிடம் ஒப்படைப்பு

நீா்மோா் பந்தல் திறப்பு

தொழிலாளா் தினம்: கொடியேற்று நிகழ்ச்சிகள்

SCROLL FOR NEXT