கன்னியாகுமரி

நாகா்கோவிலில் சாலைப் பணி: இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்

DIN

நாகா்கோவிலில் சாலைப் பணி நடைபெறவுள்ளதால் வெள்ளிக்கிழமை முதல் (நவ. 8) போக்குவரத்து மாற்றம் அமலுக்கு வருகிறது.

இதுகுறித்து, நாகா்கோவில் போக்குவரத்து காவல் ஆய்வாளா் அருள் கூறியது: நாகா்கோவிலில் ஈத்தாமொழி சந்திப்பு முதல் பீச்ரோடு சந்திப்பு வரையிலான சாலைப் பணி வெள்ளிக்கிழமை தொடங்குகிறது. இதனால், கன்னியாகுமரி, பள்ளம் பகுதிகளிலிருந்து வரும் அனைத்து வாகனங்களும், சவேரியாா் கோயில் சந்திப்பு, செட்டிகுளம் சந்திப்பு வழியாக செல்ல வேண்டும்.

பெண்கள் கிறிஸ்தவக் கல்லூரி சந்திப்புப் பகுதியில் ‘இன்டா்லாக்’ பதிக்கும் பணி நடைபெறவுள்ளது. இதையொட்டி, டதி பள்ளி சந்திப்பிலிருந்து பெண்கள் கிறிஸ்தவக் கல்லூரி சந்திப்பு வரையுள்ள பேலஸ் சாலையில் வாகனங்கள் செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதனால் வடசேரி செல்லும் அனைத்து வாகனங்களும் டதி பள்ளி சந்திப்பிலிருந்து வாட்டா் டேங்க் சாலை, கிறிஸ்து அரசா் ஆலயம் சந்திப்பு வழியாக வந்து மீண்டும் பெண்கள் கிறிஸ்தவக் கல்லூரி சந்திப்புக்கு வந்து வடசேரி செல்லும் வகையில் போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளது. இந்த மாற்றம் வெள்ளிக்கிழமை காலை முதல் அமலுக்கு வருகிறது. வாகன ஓட்டிகள் இதைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தினம் தினம் திருநாள்: தினப்பலன்

இன்றைய ராசிபலன்கள்!

அதிக வெப்ப அலையிலிருந்து தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

SCROLL FOR NEXT