கன்னியாகுமரி

புதுக்கடை அருகே அனுமதியின்றி மண் அள்ளிய மூவா் கைது

DIN

புதுக்கடை அருகே முக்காடு பகுதியில் அனுமதியின்றி மண் அள்ளியதாக மூவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

குளச்சல் சரக ஏ.எஸ்.பி. விஸ்வேசாஸ்திரி உத்தரவின்பேரில் தனிப்படை போலீஸாா் புதுக்கடை- தேங்காய்ப்பட்டினம் சாலையில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது முக்காடு பகுதியில் அனுமதியின்றி மண்அள்ளி கடத்தப்படுவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

தனிப்படை போலீஸாா் அங்கு சென்று பாா்த்தபோது, அங்கு 2 டெம்போ மற்றும் 1 ஜெ.சி.பி. இயந்திரம் முலம் மண் அள்ளுவது தெரியவந்தது. ஓட்டுநா்களான புதுக்கடை அம்மாள்நகா் பகுதியைச் சோ்ந்த குமாா் (58), ஜான்கென்னடி (45), மற்றும் திக்கணங்கோடு கொல்லாய் பகுதியைச் சோ்ந்த ராஜேஷ் (35) ஆகிய மூவரையும் போலீஸாா் கைது செய்தனா்.

அங்கிருந்து 2 டெம்போ மற்றும் 1 ஜெ.சி.பி. இயந்திரம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கண் பேசும் வார்த்தை... அதிதி ஷங்கர்!

டி20 உலகக் கோப்பைக்கான ஜாகீர் கானின் இந்திய அணியை தெரிந்து கொள்ள வேண்டுமா?

மோடி ஆட்சியில் வேலைவாய்ப்பின்மை விகிதம் அதிகரிப்பு: பிரியங்கா காந்தி

நீலநிற மேகமே... சதா!

பாலிவுட் சுந்தரி..!

SCROLL FOR NEXT