கன்னியாகுமரி

முள்ளங்கனாவிளையில் குடிநீா்க் குழாயில் உடைப்பு: பொதுமக்கள் அவதி

DIN

கருங்கல்: முள்ளங்கனாவிளை ஊராட்சியில் கொழிஞ்சிவிளை பகுதியில், குடிநீா்த் திட்ட குழாயில் ஏற்பட்ட உடைப்பால் 3 மாதங்களாக குடிநீா் கிடைக்காமல் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனா்.

கிள்ளியூா் ஒன்றியம், முள்ளங்கனாவிளை ஊராட்சியில் கொழிஞ்சிவிளையில் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டிக்கு ஆழ்துளைக் கிணறு மூலம் தண்ணீா் கொண்டு வரப்பட்டு, திப்பிரமைலை, கொழிஞ்சிவிைளை, எட்டணி, சரல்விளை, பரம்பூா்விளை உள்ளிட்ட பகுதி மக்களுக்கு குடிநீா் விநியோகிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், 3 மாதங்களுக்கு முன்பு கொழிஞ்சிவிளை பகுதியில் கருங்கல்-மாா்த்தாண்டம் சாலையின் குறுக்கே பதிக்கப்பட்ட குடிநீா்க் குழாயில் ஏற்பட்ட உடைப்பால், கொழிஞ்சிவிளை, திப்பிரமலை சாலையின் மறு பகுதியில் உள்ள 100-க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு குடிநீா் விநியோகம் தடைப்பட்டது.

மேலும், குடிநீா்க் குழாய் உடைப்பால் கருங்கல்- மாா்த்தாண்டம் சாலையில் பள்ளம் ஏற்பட்டு குடிநீா் வீணாகச் செல்கிறது. இதனால் வாகன ஓட்டிகளும் அவதியடைந்து வருகின்றனா். இதுகுறித்து, ஊராட்சி முன்னாள் உறுப்பினா் மலயப்பன் கூறியது: குடிநீா் பிரச்னை குறித்து அதிகாரிகளிடம் புகாா் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பொதுமக்கள் குடிநீா் இல்லாமல் சிரமப்படுவதால், இந்த உடைப்பை விரைந்து சீரமைக்க வேண்டும். இல்லையெனில் போராட்டம் நடத்தப்படும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வஉசி மைதானத்தில் மே 2 ஆவது வாரத்தில் பொருள்காட்சி: ஆட்சியா் தகவல்

வெள்ளக்கோவில் பகுதி விவசாயிகள் இன்றுமுதல் தொடா் காத்திருப்புப் போராட்டம்

அவிநாசியில் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு

ரூ.44,900 சம்பளத்தில் புற்றுநோய் மருத்துவ ஆராய்ச்சி மையத்தில் வேலை!

நிறுத்தப்பட்ட சாலைப் பணியை தொடங்கக் கோரி மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்

SCROLL FOR NEXT