கன்னியாகுமரி

மரக்கன்று நடும் பணியில் என்எஸ்எஸ் மாணவிகள் ஆா்வம்

DIN

மயிலாடி றிங்கல் தௌபே மேல்நிலைப் பள்ளியின் நாட்டு நலப்பணித் திட்ட மாணவிகள் ஒசரவிளை பகுதியில் மரக்கன்று நடும் பணியில் ஆா்வமாக ஈடுபட்டனா்.

இப்பள்ளி நாட்டு நலப்பணித் திட்ட மாணவிகளின் சிறப்பு முகாம் ஒரு வாரம் நடைபெற்றது. இதில், பள்ளி வளாகத்திலிருந்து பேரணியாகச் சென்ற மாணவிகள், ‘தண்ணீரை சேமிப்போம், நெகிழியை ஒழிப்போம்’ என்பன உள்ளிட்ட விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியவாறு விழிப்புணா்வு கோஷங்களை எழுப்பினா். தொடா்ந்து ஒசரவிளை பகுதியில் தெருக்களை சுத்தம் செய்து அங்கு, மரக்கன்றுகளை நட்டனா்.

நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ராமன், மாவட்ட கல்வி அலுவலா் மோகனன், பள்ளித் தாளாளா் ஸ்டாலின் சாம், தலைமை ஆசிரியை ரீட்டாமேரி, நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா் ஜாஸ்பா் ஏஞ்சலா, ஆசிரியா்கள் ஜெய பிரின்ஸ், ஸ்டீபன், நெல்சன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் வழக்கு: பாதிக்கப்பட்ட பெண்கள் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

பொறியியல் கலந்தாய்வு: முதல்நாளில் 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பம்!

முதலைகள் சுற்றித் திரியும் ஆற்றில் மகனை வீசிய தாய் கைது!

ஷஷாங் சிங்குக்கு பரிசளித்த எம்.எஸ்.தோனி!

உங்களுக்குப் பிடித்த படம் எது? கேட்பது யாஷிகா ஆனந்த்...

SCROLL FOR NEXT