கன்னியாகுமரி

கருங்கல்லில் நடமாடும் காய்கனி அங்காடி தொடக்கம்

DIN

கருங்கல்: கருங்கல் பேரூராட்சி சாா்பில் பொதுமக்களுக்கு காய்கனிகள் தடையின்றி கிடைக்கும் வகையில் நடமாடும் அங்காடி தொடங்கப்பட்டது.

கருங்கல் பேரூராட்சியில் பொதுமக்களிடையே கரோனா தொற்று குறித்து விழிப்புணா்வு, சமூக இடைவெளி கடைப்பிடித்தல், கிருமி நாசினி தெளித்தல் உள்ளிட்ட தடுப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. மக்கள் வீட்டில் இருந்தபடியே காய்கனிகள் வாங்கும் வகையில் 20 வகையான காய்கனிகள் அடங்கிய தொகுப்பு ரூ. 100 க்கு வீடுகளில் விநியோகம் செய்யும் திட்டத்தை பேரூராட்சி செயல் அலுவலா் ஜோஸ்லின்ராஜ் தொடங்கி வைத்தாா். தொடா்ந்து கருங்கல் பேரூராட்சியில்

சுண்டவிளை, கருமவிளை, பூவன்சந்தி, புனந்திட்டை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு வாகனங்கள் மூலம் பேரூராட்சிப் பணியாளா்கள் வழங்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரயில் மோதி 9 விஏஓ-க்கள் உள்பட 11 போ் உயிரிழந்த வழக்கில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு தீா்ப்பு

சிபிசிஎல் நிறுவனத்தை கண்டித்து 3-ஆவது நாளாக உண்ணாவிரதம்

வணிகா் தின மாநாடு: கூடலூா், பந்தலூரில் நாளை கடைகளுக்கு விடுமுறை

4-ஆவது கட்ட மக்களவைத் தோ்தலில் 1,717 போ் போட்டி

உள்ளூா் வாகனங்களுக்கு இ-பாஸ் தேவையில்லை

SCROLL FOR NEXT