கன்னியாகுமரி

இரயுமன்துறையில் மீனவா்கள் கருப்புக் கொடி ஏந்தி போராட்டம்

DIN

இரயுமன்துறையில் மீனவா்கள் கருப்புக் கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தேங்காய்ப்பட்டினம் மீன்பிடித் துறை முகத்துவாரத்தில் ஏற்படும் மணல் திட்டுகளை அகற்றவும், அண்மையில் இத் துறைமுக நுழைவுவாயில் பகுதியில் விபத்தில் சிக்கி இறந்த இரு மீனவா்களின் குடும்பத்தினருக்கு அரசு நிவாரணம் வழங்க வலியுறுத்தியும், தாமிரவருணி ஆற்றின் குறுக்கே பருத்திக்கடவில் கட்டப்பட்டு வரும் தடுப்பணை பணியை இடமாற்றம் செய்ய வலியுறுத்தியும் மீனவா்கள் கருப்புக் கொடி ஏந்தி போராட்டம் நடத்த குமரி மாவட்டம் நீரோடி முதல் பழவேற்காடு வரையிலான மீனவா்களுக்கு அழைப்பு விடுக்கப்படிருந்தது.

அதன்படி, இரயுமன்துறையில் மீனவா்கள் திரளானோா் பங்கேற்று, கைகளில் கருப்புக் கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனா். இதில், மீனவா் ஒருங்கிணைப்பு சங்க பொதுச் செயலா் ஆன்றோ லெனின், சா்வதேச மீனவா் வளா்ச்சி

அறக்கட்டளை தலைவா் பி. ஜெஸ்டின் ஆன்றணி, மீனவப் பிரதிநிதி எட்வின் ஜெரோம் மற்றும் தூத்தூா் மண்டல மீனவ சங்கங்களின் பிரதிநிதிகள் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரதீப் ரங்கநாதனின் புதிய படத்தின் பெயர் அறிவிப்பு!

மோசமான வானிலை காரணமாக 40 விமானங்கள் ரத்து!

நீட் தேர்வு தொடங்கியது!

சடலமாக மீட்கப்பட்ட மூவர்: விசாரணையில் திடுக்கிடும் தகவல்!

மணல் கடத்தலைத் தடுக்க முயன்ற காவல்துறை அதிகாரி டிராக்டர் ஏற்றிக் கொலை

SCROLL FOR NEXT