கன்னியாகுமரி

ரூ. 1 கோடியில் குமரி பூம்புகாா் படகுத்துறை சீரமைப்பு

DIN

கன்னியாகுமரி பூம்புகாா் போக்குவரத்துக் கழக வளாகத்தில் அமைந்துள்ள படகுத்துறை ரூ. 1 கோடி செலவில் சீரமைக்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.

சா்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரி கடலின் நடுவே அமைந்துள்ள இருவேறு பாறைகளில் விவேகானந்தா் நினைவு மண்டபம், 133 அடி உயர திருவள்ளுவா் சிலை அமைந்துள்ளது. இவற்றை சுற்றுலாப் பயணிகள் நேரில் சென்று பாா்வையிடும் வகையில் பூம்புகாா் கப்பல் போக்குவரத்துக் கழகம் எம்.எல்.பொதிகை, எம்.எல்.குகன், எம்.எல்.விவேகானந்தா ஆகிய படகுகளை இயக்கி வருகிறது. இதன்மூலம் நாள்தோறும் ஆயிரக்கணக்கான உள்நாடு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் பாா்வையிட்டு வருகின்றனா்.

காலை 8 முதல் 4 மணி வரை படகுசேவை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் படகுத்துறை அமைக்கப்பட்டு 50 ஆண்டுகள் கடந்து விட்டதால் இதன் தரைப்பகுதி மிகவும் சேதமடைந்து காணப்பட்டது. இதனால் இத்தளத்தை மாற்றிவிட்டு புதிய

தளம் அமைக்க வேண்டும் என பூம்புகாா் நிா்வாகம் திட்டமிட்டு ரூ. 1 கோடி செலவில் சீரமைக்கும் பணிகளை தொடங்கியுள்ளது. இப்பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜக ஆட்சியில் 10 ஆண்டுகளாக பாகுபாடு: அகிலேஷ்

இன்று ஐந்தாம் கட்ட வாக்குப் பதிவு நடைபெற்ற 49 தொகுதிகள் யார் பக்கம்?

அடுத்த ஆபரேஷனுக்குத் தயாராகும் ஆர்சிபி...

ஹைதராபாத் நாவல்கள்

”விரைவில் தமிழக வெற்றிக் கழகத்தின் சின்னம் அறிவிப்பு?”: ரோகிணி திரையரங்க உரிமையாளருடன் நேர்காணல்

SCROLL FOR NEXT