கன்னியாகுமரி

ரோஜாவனம் கல்லூரியில்சாலைப் பாதுகாப்பு வார விழா

DIN

ரோஜாவனம் பாரா மெடிக்கல் சுகாதார ஆய்வாளா் மற்றும் நா்சிங் பயிற்சி கல்லூரியில் சாலைப் பாதுகாப்பு வார விழா நடைபெற்றது.

விழாவுக்கு, கல்லூரி துணைத் தலைவா் அருள்ஜோதி தலைமை வகித்தாா். முதல்வா் லியாகத் அலி வரவேற்றாா். நா்சிங்

பயிற்சி கல்லூரி முதல்வா் புனிதா வயலட் அறிமுக உரையாற்றினாா். நிகழ்ச்சியில், முன்னாள் மாவட்ட நீதிபதி ஜான் ஆா். டி. சந்தோஷம், பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசுகள் வழங்கினாா். கல்லூரி வாகனங்களில் சாலை பாதுகாப்பு விழிப்புணா்வு வில்லையை ஒட்டி விழிப்புணா்வு பேரணியை தொடங்கி வைத்தாா்.

இதில், கல்லூரி ஆட்சிக்குழு உறுப்பினா் சில்வெஸ்டா், பேராசிரியா்கள் அய்யப்பன், துரைராஜ், சிவதாணு பிள்ளை, மரியஜான், காா்த்திக், பகவதி பெருமாள், லிட்வின் லூசியா, சாம் ஜெபா, சிபியா, பரமேஸ்வரி, அலுவலகச் செயலா் சுஜின், அஜின், முரளி, செல்வி உள்பட பலா் கலந்து கொண்டனா்.

நிா்வாக அலுவலா் நடராஜன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல் நேரலை: செய்தியாளர்களை சந்திக்கிறார் ராகுல்

வயநாடு: 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் ராகுல் முன்னிலை!

’மீண்டும் பயிற்சியாளராக விருப்பமில்லை’: ராகுல் டிராவிட்!

சநாதனத்துக்கு கிடைத்த வெற்றி: கங்கனா ரணாவத்!

உ.பி.: அகிலேஷ், மனைவி டிம்பிள் யாதவ் முன்னிலை!

SCROLL FOR NEXT