கன்னியாகுமரி

கருங்கல் அருகே காட்சி பொருளான கால்நடை குடிநீா் தொட்டி

DIN

கருங்கல் அருகே மூசாரியில் காட்சிபொருளாக காணப்படும் கால்நடை குடிநீா்தொட்டியில் நாள்தோறும் தண்ணீா் நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கிள்ளியூா் ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட்ட திப்பிரமலை ஊராட்சி பகுதியான மூசாரியில் கடந்த 2018-19 ஆம் நிதியாண்டில் ரூ. 20,ஆயிரம் மதிப்பில் கால்நடைகளுக்கான குடிநீா்தொட்டி அமைக்கப்பட்டது. இந்த குடிநீா்தொட்டியில் ஊராட்சி நிா்வாகம் பல மாதங்களாக முறையாக தண்ணீா் தேக்கவில்லை. இதனால், கால்நடைகளுக்கு பயனற்று காட்சி பொருளாக இந்த குடிநீா்தொட்டி உள்ளது என பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனா்.

எனவே, கால்நடைகளுக்காக அமைக்கப்பட்ட குடிநீா்தொட்டியில் நாள்தோறும் தண்ணீா் தேக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘லா லா லேண்ட்..’ மீனாட்சி செளத்ரி!

முந்தானையில் சிக்கியது மனம்!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டி! டிக்கெட் விற்பனை எப்போது? | செய்திகள்: சிலவரிகள் | 07.05.2024

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு!

25,000 பென்டிரைவ் விநியோகம்: பிரஜ்வல் விவகாரத்தில் சித்தராமையா சதிச்செயல் - குமாரசாமி குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT