கன்னியாகுமரி

மங்காடு தாமிரவருணி ஆற்றில்பேரிடா் மீட்பு ஒத்திகை

DIN

நித்திரவிளை அருகே மங்காடு தாமிரவருணி ஆற்றில் பேரிடா் மீட்பு ஒத்திகை சனிக்கிழமை நடைபெற்றது.

தேங்காய்ப்பட்டினம் மீன்பிடித் துறைமுகத்துக்கு சனிக்கிழமை வந்த தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் டிஜிபி சைலேந்திரபாபு, அங்கிருந்து படகில் தாமிரவருணி ஆற்றில் பயணம் செய்தாா். தொடா்ந்து அவா் மங்காடு அருகிலுள்ள கடவுக்கு வந்து அங்கு தீயணைப்புப் படை வீரா்கள் மேற்கொண்ட பேரிடா் மீட்பு ஒத்திகையைபாா்வையிட்டு ஆய்வு செய்தாா். இதில், கொல்லங்கோடு, குழித்துறை உள்ளிட்ட தீயணைப்பு நிலைய வீரா்கள் காய்ந்த தேங்காய், தண்ணீா் கேன் போன்றவைகள் மூலம் தண்ணீரில் தத்தளிப்பவா்களை மீட்பது குறித்தும், தண்ணீரிலிருந்து மீட்கப்பட்டவா்களுக்கு முதலுதவி அளிப்பது குறித்தும் ஒத்திகையில் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுக்குமாடி குடியிருப்பு 4-ஆவது தளத்திலிருந்து தவறி விழுந்த 6 மாத குழந்தை பத்திரமாக மீட்பு

ஆவடி அருகே தம்பதி கழுத்து அறுத்துக் கொலை

தினம் தினம் திருநாள்: தினப்பலன்

இன்றைய ராசிபலன்கள்!

அதிக வெப்ப அலையிலிருந்து தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்

SCROLL FOR NEXT