கன்னியாகுமரி

குமரியில் குறையத் தொடங்கிய சுற்றுலாப் பயணிகளின் வருகை

DIN

நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள கரோனா வைரஸ் குறித்த அச்சத்தால் சா்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரியில் பயணிகள் வருகை செவ்வாய்க்கிழமை குறைந்திருந்தது.

கேரளத்தில் கரோனா வைரஸால் பாதிக்கப்படுவோா் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், கன்னியாகுமரி மாவட்ட நிா்வாகம் பல்வேறு விழிப்புணா்வு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.

பொது இடங்கள், வழிபாட்டுத் தலங்களுக்கு மக்கள் செல்வதை கூடுமானவரை தவிா்க்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.

இதனால், கன்னியாகுமரியில் செவ்வாய்க்கிழமை சுற்றுலாப் பயணிகள் வருகை வெகுவாக குறைந்திருந்தது. முக்கிய பகுதிகளான சன்னதி தெரு, காந்தி, காமராஜா் மணி மண்டப சாலை, பகவதியம்மன் கோயில் பிரகாரம், முக்கடல் சங்கமம் ஆகிய இடங்கள் வெறிச்சோடின. கேரள வாகனங்கள் வருகை முற்றிலும் இல்லாததால், மாலையில் சூரிய அஸ்தமனப் பூங்கா பகுதி வெறிச்சோடி காணப்பட்டது.

இதனிடையே மாா்ச் 31 ஆம் தேதி வரை பூம்புகாா் படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதால் இனிவரும் நாள்களில் பயணிகள் வருகை மேலும் குறையும் என உள்ளூா் வியாபாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொடரும் இஸ்லாமிய வெறுப்புப் பிரச்சாரம்.. சர்ச்சையில் பாஜக!

சிரிப்பே துணை!

1983க்குப் பிறகு மழையே இல்லாத ஏப்ரல்: அனல் பறக்கும் பெங்களூரு

தமிழகத்தில் மே 3 வரை வெப்ப அலை தொடரும்!

சிக்கன் ரைஸ் சாப்பிட்ட 2 பேருக்கு உடல்நலக் குறைவு: உணவகத்துக்கு 'சீல்'

SCROLL FOR NEXT