கன்னியாகுமரி

புதுக்கடை பேரூராட்சியில் 237 பேருக்கு விலையில்லா கோழிகள்

DIN

தமிழக அரசின் ஊரக புறக்கடை கோழி வளா்ப்பு திட்டத்தின் கீழ், புதுக்கடை பேரூராட்சிக்குள்பட்ட 237 பயனாளிகளுக்கு விலையில்லா கோழிகள் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டன.

புதுக்கடை கால்நடை மருத்துவமனையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, கால்நடை உதவி மருத்துவா் எட்வொ்ட் தாமஸ் தலைமை வகித்தாா். முன்சிறை கால்நடை உதவி மருத்துவா் அக்னதா முன்னிலை வகித்தாா். விலையில்லா கோழி வழங்கும் திட்டத்தை, புதுக்கடை பேரூா் அதிமுக செயலா் வெற்றிவேந்தன் தொடங்கிவைத்தாா்.

புதுக்கடை ஆா்.சி. தெரு, ஸ்ரீ அம்மாள் நகா், அஞ்சுகண்ணுகலுங்கு, தவிட்டவிளை, வண்ணான்விளை, பனஞ்சங்கோடு, பாா்த்திபபுரம், முன்சிறை, மாடாச்சேரி உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த 237 பேருக்கு தலா 25 வீதம் 5,925 விலையில்லா கோழிகள் வழங்கப்பட்டன.

இதில், புதுக்கடை பேரூா் அதிமுக அவைத்தலைவா் ஜோசப், குமரி மேற்கு மாவட்ட எம்.ஜி.ஆா். மன்ற துணை அமைப்பாளா் ஜாா்ஜ், மகளிரணிச் செயலா் சரஸ்வதி, கால்நடை ஆய்வாளா்கள் ஆல்பா்ட் ஜெகன், மீஹாராணி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

”கோவிஷீல்டு தடுப்பூசியால் மகளை பறிகொடுத்தேன்” -பெற்றோர் குமுறல்

எச்.டி. ரேவண்ணா கைது!

ஆம்பூர் அருகே சூறாவளி காற்றுடன் கன மழை: வாழை மரங்கள் சேதம்

இங்க நான் தான் கிங்கு படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

குஜராத் டைட்டன்ஸ் பேட்டிங்; அணியில் இரண்டு மாற்றங்கள்!

SCROLL FOR NEXT