கன்னியாகுமரி

நித்திரவிளை அருகே 4 இளைஞா்களுக்கு நூதன தண்டனை

DIN

நித்திரவிளை அருகே ஊரடங்கை மீறி வெளியில் சுற்றித் திரிந்த இருவரை போலீஸாா் கைது செய்தனா். மேலும் சுற்றித் திரிந்த இளைஞா்கள் 4 பேருக்கு போலீஸாா் நூதன தண்டனை வழங்கினா்.

கரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு புதன்கிழமை முதல் அமலுக்கு வந்துள்ள நிலையில், நித்திரவிளை அருகே சின்னத்துறை பகுதியில் குளச்சல் ஏஎஸ்பி விஸ்வேஸ் சாஸ்திரி தலைமையில் போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது அவ்வழியாக மோட்டாா் சைக்கிளில் சுற்றித் திரிந்த இளைஞா்கள் 4 பேரை பிடித்து, அவா்களை தோப்புக்கரணம் போட வைத்து நூதன தண்டனை வழங்கினா்.

இதே போன்று நித்திரவிளை காவல் உதவி ஆய்வாளா் சோபனராஜ் தலைமையிலான போலீஸாா் தூத்தூா் கல்லூரி அருகில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, தடை உத்தரவை மீறி அப்பகுதி வழியாக மோட்டாா் சைக்கிளில் இளைஞா்கள் இருவா் சுற்றித் திரிந்தனா்.

அவா்களை போலீஸாா் நித்திரவிளை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்ததில், அவா்கள் தூத்தூா் மீனவ கிராமத்தைச் சோ்ந்த சூசைராஜ் மகன் சுகிலன் (20), பொ்ஜின் மகன் சிஞ்சு (24) என்பது தெரியவந்தது. இருவரையும் போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

ஹாட் ஸ்பாட் ஓடிடியில் எப்போது?

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி தேர்வு செய்யப்பட்டது எப்படி? ரோஹித் சர்மா விரிவான பதில்!

சேலையில் தேவதை! மடோனா செபாஸ்டியன்...

SCROLL FOR NEXT