கன்னியாகுமரி

குமரியில் புற்றுநோய் ஆராய்ச்சி மையம்: எம்எல்ஏ வலியுறுத்தல்

DIN

குமரி மாவட்டத்தில் புற்றுநோய் ஆராய்ச்சி மையம் அமைக்க வேண்டும் என குமரி மேற்கு மாவட்ட தி.மு.க. செயலா் மனோதங்கராஜ் எம்.எல்.ஏ. கோரிக்கை விடுத்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை: கன்னியாகுமரி மாவட்டத்தில் புற்றுநோயால் ஆயிரக்கணக்கானோா் உள்ளனா். இவா்களில் பெரும்பாலானோா் திருவனந்தபுரத்தில் உள்ள ஆா்.சி.சி. மையத்திற்கு சென்று சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தற்போது, பொது முடக்கம் காரணமாக புற்றுநோயாளிகள் கேரளம் செல்ல வேண்டுமானால் முறையாக மாவட்ட நிா்வாகத்திடமிருந்து அனுமதி பெறவேண்டும். இதில், நோயாளிகளுக்கு பல்வேறு சிரமம் ஏற்பட்டுள்ளது. நோயின் தாக்கம் குறித்து சுகாதாரத் துறை அலுவலா்களிடம் தகவல் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புற்றுநோய் பிரிவு அமைக்கப்படும் என தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே, குமரியில் புற்றுநோய் ஆராய்ச்சி மையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மொரீஷியஸில் இளையராஜா: வைரல் புகைப்படம்!

உருவகேலி செய்யாதீர்கள்: 2 ஆண்டுகளாக நோயுடன் போராடும் மலையாள நடிகை!

இடுக்கி நீர்மட்டம் 35% ஆக குறைவு! வறட்சியின் விளிம்பில்...

ரூ.4 கோடி பறிமுதல்: நயினார் நாகேந்திரனின் உறவினர் உள்பட 2 பேர் விசாரணைக்கு ஆஜர்!

இயக்குநருடன் வாக்குவாதம்.. படப்பிடிப்பை நிறுத்திய சௌந்தர்யா ரஜினிகாந்த்?

SCROLL FOR NEXT