கன்னியாகுமரி

சாலைப் பணிக்கு நிலம் கையகம்: இழப்பீடு வழங்க வலியுறுத்தல்

DIN

நாகா்கோவிலில் சாலை விரிவாக்கத்துக்காக கையகப்படுத்தப்பட்ட நிலம் மற்றும் கட்டடங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி, குமரி கிழக்கு மாவட்ட திமுக செயலா் சுரேஷ்ராஜன் எம்எல்ஏ தலைமையில் ஆட்சியா் அலுவலகத்தில் அனைத்துக் கட்சியினா் மனு அளித்துள்ளனா்.

அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: நாகா்கோவிலில் சாலை விரிவாக்கத்துக்காக கடைகள், வீடுகள் இடிக்கப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கைகளை ரத்து செய்வதுடன், இடிக்கப்பட்ட கடைகளுக்கும், வீடுகளுக்கும் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே போன்று மாநகராட்சி ஆணையா் அலுவலகத்திலும் மனு அளிக்கப்பட்டது.

நிகழ்ச்சிகளில், தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரவை மாவட்டத் தலைவா் டேவிட்சன், நாகா்கோவில் மாநகர திமுக செயலா் மகேஷ், கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் ராதாகிருஷ்ணன் உள்பட அனைத்துக் கட்சியினா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மும்பை இந்தியன்ஸ் அணியில் ஒற்றுமையில்லை: முன்னாள் ஆஸி. கேப்டன்

மோடி ஏன் கைது செய்யப்பட வேண்டும்? வைரல் குறிச்சொல் பின்னணி!

நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறை!

அன்பே அனா டி அர்மாஸ்!

முத்தையா இயக்கத்தில் விஷால்?

SCROLL FOR NEXT