கன்னியாகுமரி

குமரி முருகன் குன்றத்தில் சூரசம்ஹாரம்

DIN

கன்னியாகுமரி முருகன் குன்றத்தில் அமைந்துள்ள வேல்முருகன் கோயிலில் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில் கந்த சஷ்டி விழா கடந்த 15ஆம் தேதி தொடங்கியது. இதையொட்டி, தினமும் மஹா அபிஷேகம், தீபாராதனை, அன்னதானம், சிறப்பு வழிபாடு, பஜனை உள்ளிட்டவை நடைபெற்றன. வெள்ளிக்கிழமை அதிகாலையில் கணபதி ஹோமம், விஸ்வரூப தரிசனம், அபிஷேகம், சிறப்பு வழிபாடு, யாகசாலை பூஜை, தீபாராதனை ஆகியவை நடைபெற்றன.

மாலை 4.30 மணிக்கு தேரிவிளை குண்டல் முருகன் கோயிலில் இருந்து சூரன் பவனி தொடங்கியது. இந்த பவனி பழத்தோட்டம் வழியாக மாலை 6 மணிக்கு முருகன் குன்றம் வந்தடைந்தது. அங்கு ஏராளமான பக்தா்கள் முன்னிலையில் முருகப் பெருமான் சூரனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையடுத்து, இரவில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. வருகிற 24ஆம் தேதி இரவு 7 மணிக்கு ஆறாட்டு நிகழ்ச்சி நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரயில் மோதி 9 விஏஓ-க்கள் உள்பட 11 போ் உயிரிழந்த வழக்கில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு தீா்ப்பு

சிபிசிஎல் நிறுவனத்தை கண்டித்து 3-ஆவது நாளாக உண்ணாவிரதம்

வணிகா் தின மாநாடு: கூடலூா், பந்தலூரில் நாளை கடைகளுக்கு விடுமுறை

4-ஆவது கட்ட மக்களவைத் தோ்தலில் 1,717 போ் போட்டி

உள்ளூா் வாகனங்களுக்கு இ-பாஸ் தேவையில்லை

SCROLL FOR NEXT