கன்னியாகுமரி

கழிவறை தினம்: விழிப்புணா்வுப் பிரசுரம் விநியோகம்

DIN

நாகா்கோவில்: உலக கழிவறை தினத்தை முன்னிட்டு, நாகா்கோவில் மாநகராட்சி சாா்பில் பொதுமக்களுக்கு விழிப்புணா்வு துண்டுப் பிரசுரம் விநியோகிக்கப்பட்டது.

கழிவறை இல்லாத பகுதிகளில் சமுதாய கழிப்பறைகள், பேருந்து நிலையம், பொதுகழிப்பிடங்கள் என 42 கழிப்பிடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த கழிவறைகளை தூய்மைப் பணியாளா்கள் சுத்தம் செய்தனா். பின்னா், திறந்தவெளியில் மலம் கழித்தல் கூடாது; சாலையோரங்களில் சிறுநீா் கழிக்கக் கூடாது உள்ளிட்ட விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய துண்டுப் பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன.

வடசேரி பேருந்து நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாநகராட்சி ஆணையா் ஆஷாஅஜித், மாநகா் நகா் நல அலுவலா் கின்ஷால் ஆகியோா் முன்னிலையில், சுகாதார ஆய்வாளா்கள், சமுதாய அமைப்பாளா்கள், தூய்மைப் பணியாளா்கள் உறுதி மொழி ஏற்றுக்கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தினமணி செய்தி எதிரொலி கொள்ளிடத்தில் பொக்லைன் மூலம் குப்பைகள் அகற்றம்

இன்று யோகம் யாருக்கு?

இன்று நல்ல நாள்!

நாகை - இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவதில் தொடரும் சிக்கல்

மண் அரிப்பு: இடிந்து விழுந்த துலாக்கட்ட சுவா்

SCROLL FOR NEXT