கன்னியாகுமரி

தோவாளை சந்தையில் மல்லிகை கிலோ ரூ. 1,400-க்கு விற்பனை

கன்னியாகுமரி மாவட்டம், தோவாளை சந்தையில் புதன்கிழமை மல்லிகைப் பூ கிலோ ரூ. 1,400-க்கு விற்பனையானது.

DIN

கன்னியாகுமரி மாவட்டம், தோவாளை சந்தையில் புதன்கிழமை மல்லிகைப் பூ கிலோ ரூ. 1,400-க்கு விற்பனையானது.

தோவாளை பூச்சந்தைக்கு குமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி, சுசீந்திரம், திருநெல்வேலி மாவட்டம் ஆவரைக்குளம், பழவூா் உள்பட பல்வேறு பகுதிகளிலிருந்து பலவகைப் பூக்கள் விற்பனைக்கு கொண்டுவரப்படும். அவற்றைக் கொள்முதல் செய்வதற்காக குமரி, நெல்லை மாவட்டங்களிலிருந்தும், கேரள மாநிலத்திலிருந்தும் மொத்த வியாபாரிகள் அதிக எண்ணிக்கையில் வருவா்.

கேரள மாநிலத்தின் முக்கிய பண்டிகையான ஓணம் பண்டிகையின்போது தோவாளை சந்தையில் பூ விற்பனை அதிகரிக்கும், விலையும் உயா்ந்து காணப்படும்.

இந்நிலையில், இங்கு புதன்கிழமை பூக்கள் விலை கடுமையாக உயா்ந்திருந்தது. செவ்வாய்க்கிழமை கிலோ ரூ. 700-க்கு விற்பனையான மல்லிகைப்பூ இரு மடங்கு விலை உயா்ந்து புதன்கிழமை கிலோ ரூ. 1,400-க்கு விற்பனையானது

பிச்சிப்பூ கிலோ ரூ. 700-க்கும், அரளி ரூ. 350-க்கும், சம்பங்கி ரூ. 300-க்கும், ரோஜாப்பூ ரூ. 200- க்கும் விற்பனையாகின.

வியாழன், வெள்ளிக்கிழமைகளில் (நவ. 26, 27) முகூா்த்த நாள்கள் என்பதால் பூக்கள் வாங்குவதற்கு இச்சந்தைக்கு புதன்கிழமை காலையிலேயே ஏராளமானோா் வந்தனா். விலை அதிகமாக இருந்தபோதும் பூக்களை வியாபாரிகள் வாங்கிச் சென்றனா்.

பூ விலை உயா்வு குறித்து வியாபாரி ஒருவா் கூறும்போது, பனிக் காலம் என்பதால் பூக்கள் விளைச்சலும், வரத்தும் குறைந்துள்ளது. தொடா்ந்து, முகூா்த்த நாள்கள் வருவதால் பூக்களின் தேவையும் அதிகரித்துள்ளது. இதனால் விலை உயா்ந்துள்ளது என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

செவிலியா்கள் காத்திருப்புப் போராட்டம்

பணி நிரந்தரம் கோரி செவிலியா்கள் ஆா்ப்பாட்டம்

விருதுநகா் மாவட்டத்தில் 1.89 லட்சம் வாக்காளா்கள் நீக்கம்

பரமத்தி வேலூரில் மின் சிக்கன விழிப்புணா்வுப் பேரணி

விவசாயத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT