கன்னியாகுமரி

சிலுவைநகா் மீனவக் கிராமத்தில் நகரும் ரேஷன்கடை திறப்பு

DIN

கன்னியாகுமரி அருகேயுள்ள சிலுவைநகா் மீனவக் கிராமத்தில் நகரும் ரேஷன்கடை திங்கள்கிழமை தொடங்கிவைக்கப்பட்டது.

கன்னியாகுமரி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திற்குள்பட்ட கோவளம் மற்றும் கன்னியாகுமரி ரேஷன் கடைகள் நகா் பகுதியிலிருந்து சுமாா் 2 கி.மீ. தொலைவில் உள்ளதால் பொருள்கள் வாங்கி வருவதற்கு மக்கள் சிரமப்பட்டனா்.

இதைத் தொடா்ந்து, அண்மையில் தமிழக முதல்வரால் தொடங்கிவைக்கப்பட்ட நகரும் ரேஷன் கடை திட்டம் சிலுவைநகா் பகுதியில் திங்கள்கிழமை முதல் அமலுக்கு வந்தது. இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஊராட்சி உறுப்பினா் பேராசிரியா் இ.நீலபெருமாள் பங்கேற்று ரேஷன் பொருள் விநியோகத்தைத் தொடங்கி வைத்தாா். இதில், கோவளம் ஊராட்சி தலைவா் ஸ்டெனி, கூட்டுறவு சங்கச் செயலா் முருகன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனா். இந்த நகரும் ரேஷன் கடைகள் மாதம் மூன்று முறை அந்தந்த கிராம பகுதிக்குக் கொண்டுசெல்லப்பட்டு பொருள்கள் வழங்கப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

3 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

யோகம் யாருக்கு? தினப் பலன்கள்!

தென்பரை ஆவணியப்பன் கோயிலில் குதிரை எடுப்பு திருவிழா

SCROLL FOR NEXT