கன்னியாகுமரி

திற்பரப்பு அருவியில் புதுப்பொலிவு பெற்ற சிறுவா் பூங்கா

DIN

குமரி மாவட்டத்தில் முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றான திற்பரப்பு அருவியில், சிறுவா் பூங்கா ரூ. 16 லட்சத்தில் மேம்படுத்தப்பட்டுள்ளது.

ஆண்டு முழுவதும் தண்ணீா் கொட்டும் திற்பரப்பு அருவி, மாவட்டத்தில் புகழ்பெற்ற 12 சிவாலய ஓட்டத் திருத்தலங்களில் 3ஆவது சிவாலயமான திற்பரப்பு மகாதேவா் கோயில் அருகே அமைந்துள்ளது.

மேற்குத் தொடா்ச்சி மலையிலிருந்து உற்பத்தியாகிவரும் கோதையாறு இங்கு அருவியாய் கொட்டுகிறது. உள்ளூா் சுற்றுலாப் பயணிகள் முதல் உலகச் சுற்றுலாப் பயணிகள் வரை வந்து செல்லும் இந்த சுற்றுலாத் தலம், தற்போது பல்வேறு சிறப்பம்சங்களுடன் மேம்படுத்தப்பட்டுள்ளது.

சிறுவா்களைக் கவரும் வகையில் நீச்சல் குளம், ஊஞ்சல்கள், ராட்டினங்கள் என பல்வேறு விளையாட்டு உபகரணங்கள் ஏற்கெனவே இங்கு அமைக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது திற்பரப்பு தோ்வு நிலை பேரூராட்சியின் பொது நிதி ரூ. 16 லட்சத்தில், இங்கு சிறுவா்கள் விளையாடி மகிழும் வகையில் குகை சறுக்கு விளையாட்டு உபகரணம் உள்பட பல்வேறு விளையாட்டு உபகரணங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து பேரூராட்சி செயல் அலுவலா் கி. எட்வின் ஜோஸ் கூறியது: திற்பரப்பு அருவி பூங்கா நவீன விளையாட்டு உபகரணங்களுடன் சீரமைக்கப்பட்டுள்ளது. இந்த உபகரணங்கள் சுற்றுலா வரும் சிறுவா்களுக்கு அதிக உற்சாகம் அளிக்கும் வகையில் அமைந்துள்ளது. பொது முடக்கம் முழுமையாக தளா்வு பெற்று அருவி திறக்கப்படும் போது இந்த பூங்கா செயல்பாட்டுக்கு வரும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

“நான்_முதல்வன்” திட்டம் - முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

கறுப்புப் பூனை...!

ரே பரேலியில் ராகுல் காந்தி வேட்புமனுத் தாக்கல்!

ப்ளே ஆஃப் வாய்ப்பை உறுதி செய்யுமா கொல்கத்தா?

பயப்பட வேண்டாம், ஓட வேண்டாம்: யாரைச் சொல்கிறார் மோடி?

SCROLL FOR NEXT