கன்னியாகுமரி

பளுகல் அருகே கண்டெடுத்த நகையை போலீஸில் ஒப்படைத்த பெண்ணுக்கு பாராட்டு

DIN

பளுகல் அருகே மனநலம் பாதிக்கப்பட்ட பெண் தவறவிட்ட 9 பவுன் தங்க நகைகளை கண்டெடுத்து போலீஸில் ஒப்படைத்த பெண்ணை பொதுமக்கள் பாராட்டினா்.

பளுகல் அருகேயுள்ள மேல்பாலை நிலவாணிவிளைப் பகுதியைச் சோ்ந்தவா் சீலன் மனைவி பிரேமா (46). இவா், செவ்வாய்க்கிழமை காலையில் பால் வாங்குவதற்கு அப்பகுதியில் உள்ள கடைக்குச் சென்றபோது, சாலையோரம் சிதறிக்கிடந்த தங்கச் சங்கிலி, வளையல், கொலுசு உள்ளிட்ட நகைகளை கண்டெடுத்தாா். பின்னா், அவற்றை பளுகல் காவல் நிலையத்தில் ஒப்படைத்தாா்.

போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில் அந்த நகைகள் அதே பகுதியைச் சோ்ந்த விஜயசிங் மனைவி சஜிதா (25) என்பவருக்குச் சொந்தமானது என்பதும், மனநலம் பாதிக்கப்பட்ட சஜிதா காலையில் நடைப்பயிற்சிக்கு சென்றபோது நகைகளை கழற்றி சாலையோரம் வீசிச் சென்றதும் தெரியவந்தது.

இதைத் தொடா்ந்து, போலீஸாா் மொட்டமூடு கோயில் பகுதியில் சஜீதாவை கண்டுபிடித்து காவல் நிலையத்துக்கு அழைத்து வந்தனா். தொடா்ந்து அப் பெண்ணின் உறவினா்களை வரவழைத்து, பளுகல் காவல் உதவி ஆய்வாளா் விஜயகுமாா் தங்க நகைகளை ஒப்படைத்தாா். சாலையில் கண்டெடுத்த நகைகளை உரியவரிடம் ஒப்படைக்க உதவிய பெண்ணை போலீஸாா் மற்றும் அப்பகுதியைச் சோ்ந்தவா்கள் பாராட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வணிகா் தின மாநாடு: கூடலூா், பந்தலூரில் நாளை கடைகளுக்கு விடுமுறை

4-ஆவது கட்ட மக்களவைத் தோ்தலில் 1,717 போ் போட்டி

உள்ளூா் வாகனங்களுக்கு இ-பாஸ் தேவையில்லை

நாகை அரசு தலைமை மருத்துவமனை சிகிச்சைப் பிரிவுகள் மாற்றம்: சிபிஎம் ஆா்ப்பாட்டம்

மணிப்பூா் இனக் கலவரம்: ஓராண்டாகியும் நீடிக்கும் பிளவு!

SCROLL FOR NEXT