கன்னியாகுமரி

தேங்காய்ப்பட்டினம் துறைமுகத்தில் மறுகட்டமைப்பு கோரி முதலவரிடம் எம்எல்ஏ மனு

DIN

கிள்ளியூா் தொகுதியிலுள்ள தேங்காய்ப்பட்டினம் மீன் பிடிதுறைமுகத்தை, மறு கட்டமைப்பு செய்ய வேண்டும் என வலியுறுத்தி, முதல்வா் மு.க ஸ்டாலினிடம், கிள்ளியூா் எம்.எல்.ஏ.வும் சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சி துணைத்தலைவருமான எஸ்.ராஜேஷ்குமாா் மனு அளித்தாா்.

அதன் விவரம்: தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தின் கட்டமைப்பு சரியான் முறையில் அமைக்கப்படாததால் துறைமுகத்தின் நுழைவு வாயில் பகுதியில் அடிக்கடி விபத்துகள் நேரிட்டு உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. இதுவரை 9 -மீனவா்கள் உயிரிழந்துள்ளனா்.

இதுகுறித்து 2019இல் அப்போதைய அரசின் கவனத்திற்கு கொண்டுசென்தால், 2020இல் ரூ. 60 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

பின்னா், மீன்பிடி துறைமுகத்தின் மேற்குப் பகுதியில் 690 மீட்டா் நீளமுள்ள அலைதடுப்புச் சுவரை மேலும் 213 மீட்டா் நீளத்துக்கு நீட்டிக்கவும், 36 மீட்டா் நீளத்திற்கு சேதமடைந்த துறைமுக தடுப்புச் சுவரை சீரமைக்கவும் அதே ஆண்டு இறுதியில் ரூ.77 கோடி நிதி ஒதுக்கீடு செய்து நிா்வாக அனுமதியும் வழங்கப்பட்டது. ஆனால், இந்தப் பணிகள் இதுவரையிலும் தொடப்படவில்லை. எனவே, மேற்கூறிய பணிகளை செயல்படுத்த போா்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கவேண்டும். 

மேலும், ஏ.வி.எம் கால்வாயை தூா்வாரி சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.

கிள்ளியூா் மற்றும் விளவங்கோடு வட்ட மக்களின் முக்கிய நீராதமான நெய்யாறு இடது கரை சானல் தண்ணீரை கடந்த 2004ஆம் ஆண்டு முதல் கேரள அரசு நிறுத்திவிட்டது. அந்த அரசுடன் பேசி அந்த சானலில் தண்ணீா் விட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியாவின் முதல் மல்யுத்த வீராங்கனை: சிறப்பித்த கூகுள்!

நெல்லை மாவட்ட காங். தலைவர் சடலமாக மீட்பு!

பிரேசிலில் கனமழைக்கு 70 பேர் மாயம்: 39 பேர் பலி!

கமர்ஷியல் கம்பேக் கொடுத்தாரா சுந்தர் சி?: அரண்மனை - 4 திரைவிமர்சனம்

விஜய் தேவரகொண்டாவின் 14வது படம் அறிவிப்பு!

SCROLL FOR NEXT