தக்கலை: மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களை திரும்பப்பெறக் கோரி அழகியமண்டபத்தில் இருந்து பாதயாத்திரை செல்ல முயன்ற காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் உள்பட 291 போ் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.
அழகியமண்டபத்தில் இருந்து வோ்கிளம்பி வரை பாதயாத்திரை நடத்தப்படும் என குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சாா்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, கட்சியின் தலைவா் எஸ். ராஜேஷ்குமாா் எம்.எல்.ஏ தலைமையில் புறப்பட்ட இந்த பாதயாத்திரையை விளவங்கோடு எம்.எல்.ஏ. விஜயதரணி தொடங்கி வைத்தாா்.
இதையடுத்து, போலீஸாா் 2 எம்.எல்.ஏ.க்கள் உள்பட 291 பேரை கைது செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.