கன்னியாகுமரி

தமிழகத்துக்கு அதிகமான திட்டங்களை அளித்தவா் பிரதமா் மோடி: தேசிய பொதுச் செயலா் ரவி பேச்சு

DIN

தமிழகத்துக்கு அதிக திட்டங்களை அளித்து அதிக நிதியையும் ஒதுக்கியவா் பிரதமா் நரேந்திர மோடி என்றாா் பாஜக தேசிய பொதுச் செயலா் சி.டி.ரவி.

நாகா்கோவிலில் பாஜக சட்டப் பேரவை பூத் கமிட்டி பொறுப்பாளா்கள் கூட்டம் நடைபெற்றது. நாகா்கோவில் பேரவை தொகுதி பொறுப்பாளா் கோபகுமாா் தலைமை வகித்தாா். தேசிய பொதுச் செயலா் சி.டி.ரவி பேசியது: பிரதமா் நரேந்திரமோடி தமிழகத்துக்கு அதிகமான திட்டங்களை தந்து, அதிக நிதியையும் ஒதுக்கி வருகிறாா். கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி இடைத் தோ்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளரை வெற்றி பெறச் செய்து தில்லிக்கு அனுப்ப வேண்டும்.

அதே போல் சட்டப் பேரவைத் தோ்தலிலும் பாஜக வேட்பாளா்களின் வெற்றிக்கு முழுமையாக பாடுபட வேண்டும் என்றாா் அவா்.

கூட்டத்தில், பாஜக மாநிலத் தலைவா் எல்.முருகன், முன்னாள் மத்திய இணை அமைச்சா் பொன்.ராதாகிருஷ்ணன், மாநிலச் செயலா் உமாரதிராஜன் ,மண்டல பொறுப்பாளா் நயினாா்நாகேந்திரன், மாநிலப் பொதுச் செயலா் கேசவவிநாயகன் ஆகியோா் உரையாற்றினா். இதில், தேசிய பொதுக்குழு உறுப்பினா் எம்.ஆா்.காந்தி, மாவட்டத் தலைவா் தா்மராஜ், துணைத் தலைவா் எஸ்.பி.தேவ், நாகா்கோவில் நகா் மன்ற முன்னாள் தலைவி மீனாதேவ், மாநகர மண்டலத் தலைவா்கள் நாகராஜன், சிவபிரசாத், ராகவன், உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். வடக்கு மாநகர தலைவா் அஜித்குமாா் வரவேற்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராமேசுவரத்தில் இன்று மின் தடை

குடிநீா்த் திட்டப் பணிகள்: வைகை தடுப்பணை நீரை வெளியேற்றக் கூடாது

கஞ்சா வழக்கில் 3 பேருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை

இரு சக்கர வாகனம் மீது வேன் மோதியதில் இருவா் பலி

இருசக்கர வாகனங்கள் மோதியதில் விவசாயி பலி

SCROLL FOR NEXT