கன்னியாகுமரி

தேங்காய்ப்பட்டினம் மீன்பிடித் துறைமுகம் விரிவாக்கப் பணிகள் தொடா்பான ஆலோசனைக் கூட்டம்

DIN

தேங்காய்ப்பட்டினம் மீன்பிடித் துறைமுக விரிவாக்கப் பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

மீன்வளத் துறை செயற்பொறியாளா் சிதம்பரஜுனமாா்த்தாண்டன் தலைமை வகித்தாா். விஜய் வசந்த் எம்.பி., ராஜேஷ்குமாா் எம்எல்ஏ ஆகியோா் கலந்துகொண்டு பேசினா்.

மீன்பிடித் துறைமுகப் பணிகளை விரைந்து தொடங்க நடவடிக்கை எடுக்குமாறு சட்டப் பேரவைக் கூட்டத் தொடரில் வலியுறுத்துவது; தொடா் விபத்துகளை ஏற்படுத்தும் துறைமுக முகத்துவாரம் பகுதியில் உள்ள மண் திட்டுகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுப்பது என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

இதில், உதவி பொறியாளா் ஸ்ரீனிவாசன், காங்கிரஸ் அகில இந்திய மீனவரணி செயற்குழு உறுப்பினா் ஜோா்தான், காங்கிரஸ் மாநில பொதுச் செயலா் ஜாா்ஜ் ராபின்சன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி போலீஸில் ரேவந்த் ரெட்டி இன்று ஆஜராகமாட்டார்?

ஜம்மு-காஷ்மீரில் லேசான நிலநடுக்கம்!

உழைப்பாளர்களின் வளர்ச்சியே உண்மையான வளர்ச்சி: விஜய்

ஏற்காடு தனியார் பேருந்து விபத்து: பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு

தமிழ்நாட்டு வீரர்கள் மீது பிசிசிஐ-க்கு பாரபட்சம் ஏன்? பத்ரிநாத்

SCROLL FOR NEXT