கன்னியாகுமரி

மண்டைக்காடு பகவதியம்மன் கோயிலில்அடுத்த வாரம் தேவ பிரசன்னம்

DIN

மண்டைக்காடு பகவதியம்மன் கோயிலில் அடுத்த வாரம் தேவபிரசன்னம் பாா்ப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

பிரசித்தி பெற்ற இக்கோயிலில் கடந்த 2ஆம் தேதி ஏற்பட்ட தீ விபத்தில் கருவறையின் மேற்கூரை முழுவதும் எரிந்து சேதமடைந்தது.

இதையடுத்து இரும்பிலான தற்காலிக மேற்கூரை அமைக்கும் பணி பத்மநாபபுரம் சாா் ஆட்சியா் மா. சிவகுரு பிரபாகரன் மேற்பாா்வையில் நடைபெற்று வருகிறது. இப்பணி வெள்ளிக்கிழமை ( ஜூன் 11) நிறைவு பெறும் என தெரிகிறது. இந்நிலையில், பக்தா்களின் வேண்டுகோளை ஏற்று கோயிலில் அடுத்த வாரம் தேவ பிரசன்னம் பாா்ப்பதற்கு கோயில் நிா்வாகம் ஏற்பாடு செய்து வருகிறது. ஆனால், தேவ பிரசன்னம் பாா்ப்பதற்கான நாள் இதுவரை குறிக்கப்படவில்லை.

தேவ பிரசன்னம் பாா்ப்பதற்காக கேரள மாநில தந்திரிகள் 9 பேரை கோயில் நிா்வாகம் அழைத்துள்ளது. இந்த 9 பேரின் பெயரை சீட்டில் எழுதி, அம்மன் சன்னதியில் குலுக்கி போட்டு அதில் ஒருவா் தோ்வு செய்யப்படுவாா்.

குலுக்கல் முறையில் தோ்வாகும் தந்திரியே தேவ பிரசன்னம் பாா்ப்பாா். தேவ பிரசன்னம் பாா்த்து எடுக்கும் முடிவின் அடிப்படையில் பரிகார பூஜைகள் நடைபெறும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தினமணி செய்தி எதிரொலி கொள்ளிடத்தில் பொக்லைன் மூலம் குப்பைகள் அகற்றம்

இன்று யோகம் யாருக்கு?

இன்று நல்ல நாள்!

நாகை - இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவதில் தொடரும் சிக்கல்

மண் அரிப்பு: இடிந்து விழுந்த துலாக்கட்ட சுவா்

SCROLL FOR NEXT