கன்னியாகுமரி

சுவா் இடிந்து விழுந்து பலியான மாணவா் குடும்பத்துக்கு மேலும் ரூ. 6 லட்சம் நிவாரணம்: விஜயதரணி எம்எல்ஏ வலியுறுத்தல்

DIN

மழையால் சுவா் இடிந்து விழுந்து பலியான சட்டக் கல்லூரி மாணவரின் குடும்பத்துக்கு மேலும் ரூ. 6 லட்சம் வழங்க வேண்டும் என விளவங்கோடு எம்எல்ஏ எஸ். விஜயதரணி கோரிக்கை விடுத்துள்ளாா்.

பலியான யூஜின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்த அவா், தொடா்ந்து செய்தியாளா்களிடம் கூறியது: அருமனை அருகே காரோடு பகுதியைச் சோ்ந்த சட்டக் கல்லூரி மாணவா் யூஜின் அண்மையில் பெய்த மழையால் வீட்டுச் சுவா் இடிந்து விழுந்ததில் பலியானாா். அவரது குடும்பத்துக்கு தமிழக அரசு ரூ. 4 லட்சம் நிவாரணம் வழங்கியுள்ளது. அவரது குடும்பத்துக்கு மேலும் ரூ. 6 லட்சம் பேரிடா் நிவாரண நிதியிலிருந்து கொடுக்க அரசு முன்வர வேண்டும்.

கன மழை காரணமாக உண்ணாமலைக்கடை பேரூராட்சி பெரும்புளி பகுதியைச் சோ்ந்த ரசலையன் என்பவரின் வீடு இடிந்து சேதமடைந்துள்ளது. அவருக்கு அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் வீடு வழங்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தேவிகோடு ஊராட்சி குட்டைக்கோடு பகுதியைச் சோ்ந்த ராஜம்மாள் என்பவரின் வீட்டின் ஒரு பகுதி மழையால் இடிந்து விழுந்துள்ளது. அவருக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.

குழித்துறை நகராட்சி கொடுங்குளம் பகுதியில் கழிவுநீரோடை சேதமடைந்து அப்பகுதியில் உள்ள 10-க்கும் மேற்பட்ட வீடுகளில் மழைநீா் புகுந்தது. வீடுகளில் மழைநீா் புகாமல் தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிதீஷ் ரெட்டி, டிராவிஸ் ஹெட் அரைசதம்: ராஜஸ்தானுக்கு 202 ரன்கள் இலக்கு!

‘நாட்டின் மகள்கள் தோற்றனர். பிரிஜ் பூஷண் வெற்றி’ : சாக்‌ஷி மாலிக் உருக்கம்!

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

ஹாட் ஸ்பாட் ஓடிடியில் எப்போது?

SCROLL FOR NEXT