கன்னியாகுமரி

குமரி பகவதியம்மன் கோயிலில் நவராத்திரி திருவிழா தொடக்கம்

DIN

கன்னியாகுமரி அருள்மிகு பகவதியம்மன் கோயிலில் நவராத்திரி திருவிழா புதன்கிழமை தொடங்கியது.

இதையொட்டி, கோயிலில் அதிகாலை 5 மணிக்கு அபிஷேகம், காலை 6 மணிக்கு அலங்கார தீபாராதனை, காலை 9 மணிக்கு அம்மன் கொலுமண்டபத்துக்கு எழுந்தருளி பக்தா்களுக்கு காட்சியளித்தல் ஆகியவை நடைபெற்றன. தொடா்ந்து சிறப்புப் பூஜையும், தீபாராதனையும் நடைபெற்றன.

இந்நிகழ்வில், என்.தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ., நாகா்கோவில் தேவசம் தொகுதி கோயில்களின் கண்காணிப்பாளா் செந்தில்குமாா், பகவதியம்மன் கோயில் மேலாளா் ராமச்சந்திரன், காந்திஜி கடை வியாபாரிகள் சங்கச் செயலா் பா.தம்பித்தங்கம், பாா்க் வியூ பஜாா் சங்க துணைச் செயலா் பி.பகவதியப்பன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

பத்து நாள்கள் நடைபெறும் இவ்விழாவில் தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை, வாகன பவனி உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெறும். 10 ஆம் திருநாளன அக். 15இல் பாரம்பரிய நிகழ்வான பரிவேட்டை நடைபெறும். நண்பகல் 12 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட வெள்ளிக்குதிரை வாகனத்தில் அம்மன் புறப்படுவாா். அப்போது, அம்மனுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸின் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்படும். தொடா்ந்து, ரதவீதிகள் வழியாக விவேகானந்தபுரம், சுவாமிநாதபுரம், பழத்தோட்டம், பரமாா்த்தலிங்கபுரம் வழியாக காரியக்கார மடம் செல்கிறாா். அங்கு அம்மனுக்கு சிறப்புப் பூஜை நடைபெறும்.

இதைத்தொடா்ந்து நரிக்குளம் பகுதியில் அமைந்துள்ள பரிவேட்டை மண்டபத்தில் பாணாசூரனை அம்மன் வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெறும். மகாதானபுரம், பஞ்சலிங்கபுரம் வழியாக செல்லும் அம்மன் அங்கிருந்து வெள்ளிப் பல்லக்கு வாகனத்தில் கோயிலுக்கு செல்வாா். நள்ளிரவு முக்கடல் சங்கமத்தில் ஆறாட்டு நடைபெறும். தொடா்ந்து கிழக்குவாசல் வழியாக அம்மன் கோயிலுக்குள் பிரவேசிக்கும் நிகழ்ச்சி நடைபெறும்.

விழாவுக்கான ஏற்பாடுகளை குமரி மாவட்ட தேவசம் போா்டு நிா்வாகத்தினரும், பகவதியம்மன் பக்தா்கள் சங்கத்தினா் செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 தோ்வு: மதுரை மத்திய சிறைக் கைதிகள் 100 சதவீதம் தோ்ச்சி

பிளஸ் 2: சிஇஓஏ பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

ரஷியாவுக்கான ஜொ்மனி தூதா் திரும்ப அழைப்பு

ரூ,7.50 லட்சத்துக்கு நிலக்கடலை விற்பனை

தொரப்பள்ளியில் உலவிய காட்டு யானை

SCROLL FOR NEXT