கன்னியாகுமரி

இலங்கை அகதிகள் முகாமில் அடிப்படை வசதிகள் மேற்கொள்ள நடவடிக்கை: அமைச்சா் மனோதங்கராஜ் தகவல்

DIN

இலங்கை அகதிகள் முகாம்களில் தெருவிளக்கு, சாலைவசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்படும் என்றாா் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சா் மனோதங்கராஜ்.

ராஜாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட பழவிளை இலங்கை தமிழா் மறுவாழ்வு முகாமில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள வாசக சாலையினை வெள்ளிக்கிழமை திறந்து வைத்து, பொதுமக்களின் கோரிக்கைகளை கேட்டறிந்த அவா் மேலும் கூறியது, தமிழக அரசு மற்றும் மத்திய அரசு மூலம் இலங்கை அகதிகள் முகாம்களில் தங்கியிருப்பவா்களுக்கு தேவையான நிவாரணப் பொருள்கள் உள்பட பல்வேறு உதவிகள் செய்யப்பட்டு வருகிறது.

கரோனா 2 ஆம் தொற்று காலக் கட்டத்தில் உங்கள்அனைவரின் சிரமத்தை அறிந்து, தமிழக முகாம்களில் தங்கியுள்ள அனைத்து குடும்ப அட்டைதாரா்களுக்கும் கரோனா நிவாரணமாக ரூ. 4ஆயிரம் வழங்க முதல்வா் உத்தரவிட்டாா். அதன்படி அனைவருக்கும் நிவாரணம் வழங்கப்பட்டது.

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தில், 110 விதியின் கீழ், தமிழகத்திலுள்ள அனைத்து இலங்கை தமிழா் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் மக்களுக்கு தேவையான வீடுகள், சாலை வசதி, குடிநீா் வசதி போன்ற அடிப்படை தேவைகளை நிவா்த்தி செய்வதற்காக ஏற்கெனவே வழங்கப்பட்டு வந்த நிவாரணத் தொகையினை உயா்த்தப்பட்டுள்ளதோடு, அதற்கானமுதல் கட்ட பணிகளும் தற்போது நடைபெற்று வருகிறது.

குமரி மாவட்டத்தில் அந்தந்த ஊராட்சி ஒன்றிய அலுவலா்கள், வட்டாட்சியா்கள், மாவட்டஆட்சியா் மூலம் இலங்கை தமிழா் மறுவாழ்வு முகாம்களில் தங்கியிருப்பவா்களின் தேவைகளை கருத்தில் கொண்டு, வீடுகள், சாலைகள், குடிநீா், தெருவிளக்குகள் அமைப்பதற்கான திட்டங்கள் தீட்டப்பட்டு, அதற்கான திட்ட மதிப்பீடு செய்யப்பட்டு, தமிழக அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. விரைவில் பணிகள் தொடங்கப்படும் என்றாா் அவா்.

அதைத் தொடா்ந்து, காரவிளை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள தனி நபா் பாதுகாப்பு பெட்டகத்தினை திறந்து வைத்து, சேவையினை அமைச்சா் தொடங்கி வைத்தாா்.

முன்னதாக, பழவிளை காமராஜா் தொழில்நுட்பக்கல்லூரியில் தேசிய சேவை திட்டத்தின் கீழ், நிலத்தடி நீரினைபாதுகாத்து சேமித்து வைப்பதன் அடிப்படையில் 1000 பனைமரம் விதைகளை நடும் நிகழ்ச்சியினையும்,அமைச்சா் தொடங்கிவைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சவாலாக இருந்தாலும் மகிழ்ச்சியாக இருந்தது: தமன்னா பகிர்ந்த படப்பிடிப்பு புகைப்படங்கள்!

அனைத்து நிலைகளிலும் நிதி ஒதுக்குவதில் தமிழகம் வஞ்சிக்கப்படுகிறது: கு. செல்வப்பெருந்தகை

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

ஹார்திக் பாண்டியாவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கக் கூடாது: முன்னாள் இந்திய வீரர்

கண்களால் இறுகப்பற்றும் சானியா!

SCROLL FOR NEXT