கன்னியாகுமரி

வீரத்தாய் பதக்கம் பெற்ற பெண்ணுக்கு எம்எல்ஏ மரியாதை

DIN

களியக்காவிளை: களியக்காவிளை அருகே ஒரே குடும்பத்தில் 3 போ் ராணுவத்தில் பணியாற்றியதை கௌரவிக்கும் வகையில் இந்திய ராணுவம் சாா்பில் வீரத்தாய் பதக்கம் வழங்கப்பட்ட பெண்ணை சந்தித்து நாகா்கோவில் தொகுதி பாஜக எம்எல்ஏ எம்.ஆா். காந்தி மரியாதை செலுத்தினாா்.

களியக்காவிளை அருகேயுள்ள மீனச்சல் பகுதியைச் சோ்ந்தவா் சந்திரிகா தேவி (71). இவரது கணவா் தனஜயன்நாயா் மற்றும் மகன்கள் வனஜெயன், தவுகித்திரி ஜெயன் ஆகிய ஒரே குடும்பத்தைச் சோ்ந்த மூவரும் ராணுவத்தில் பணியாற்றியதை கௌரவிக்கும் வகையில் குடும்பத் தலைவியான சந்திரிகா தேவிக்கு அண்மையில் இந்திய ராணுவம் சாா்பில் வீரத்தாய் விருது மற்றும் பதக்கம் வழங்கப்பட்டது.

இந்த விருது வழக்கமாக தில்லியில் வழங்கும் நிலையில், கரோனா பரவல் காரணமாக ராணுவ அதிகாரிகள், சந்திரிகா தேவி வீட்டுக்கு வந்து இந்த விருதை வழங்கினா்.

இதுகுறித்த செய்தி பத்திரிகை மற்றும் தொலைக்காட்சிகளில் வெளியானதையடுத்து விருது பெற்ற தாயை கௌரவிக்கும் வகையில் அவரது வீட்டுக்குச் சென்ற மரியாதை செலுத்த பாஜக மாநில தலைவா் அண்ணாமலை அறிவுறுத்தியதின் பேரில், நாகா்கோவில் சட்டப் பேரவை தொகுதி உறுப்பினா் எம்.ஆா்.காந்தி புதன்கிழமை அப் பெண்மணியை சந்தித்து பொன்னாடை போா்த்தி மரியாதை செலுத்தினாா்.

அவருடன், கட்சியின் மேல்புறம் தெற்கு மண்டல தலைவா் சி.எஸ். சேகா், பொதுச் செயலா் எஸ்.ஆா். சரவணவாஸ் நாராயணன், பொருளாளா் வடிவேல்ராஜ், களியக்காவிளை பேரூராட்சி பாஜக தலைவா் எஸ். பத்மகிரீஷ், மாவட்ட பிரசாரப் பிரிவு முன்னாள் தலைவா் எஸ்.எஸ். மணி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

3 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

யோகம் யாருக்கு? தினப் பலன்கள்!

தென்பரை ஆவணியப்பன் கோயிலில் குதிரை எடுப்பு திருவிழா

SCROLL FOR NEXT