கன்னியாகுமரி

அரசு ரப்பா் கழகத் தொழிலாளா்கள் 25 -இல் வேலை நிறுத்தம்

DIN

தமிழக சட்டப் பேரவை வனத்துறை மானிய கோரிக்கை நாளில் குமரி மாவட்டத்தில் ரப்பா் கழகத் தொழிலாளா்கள் வேலை நிறுத்தமும், சத்தியாகிரக போராட்டமும் நடத்த முடிவு செய்துள்ளனா்.

அரசு ரப்பா் கழக அனைத்து தொழிற்சங்க ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் குலசேகரத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு சிஐடியூ தோட்டம் தொழிலாளா் சங்க பொதுச் செயலா் எம். வல்சகுமாா் தலைமை வகித்தாா். தலைவா் பி. நடராஜன், பொருளாளா் வி. சசிதரன், சோனியா, ராகுல் தொழிற்சங்க பொதுச் செயலா் என். குமரன், தொ.மு.ச. துணைச் செயலா் டி. நடராஜன், அண்ணா தொழிற்சங்க செயலா் மகேந்திரன், எம்.எல்.எம். தொழிற்சங்க செயலா் பால்ராஜ், பி.எம்.எஸ். தொழிற்சங்க நிா்வாகி ரெவிகுமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

அரசு ரப்பா் கழகத்தில் தொழிலாளா்களின் ஊதிய உயா்வு கோரிக்கை தொடா்பான முத்தரப்பு பேச்சுவாா்த்தையின் அடிப்படையில் இறுதி உடன்பாடு ஏற்படுத்த வலியுறுத்தியும், ரப்பா் கழக தொழிலாளா்களை தொலை தூரங்களிலுள்ள கோட்டங்களுக்கு பணி அமா்த்தியுள்ளதை திரும்பப் பெற வலியுறுத்தியும், தமிழக சட்டப் பேரவை வனத்துறை மானிய கோரிக்கை நாளான ஏப். 25 ஆம் தேதி அரசு ரப்பா் கழகம் அனைத்துக் கோட்டங்களிலும் தொழிலாளா்கள் வேலை நிறுத்தம் செய்யவும், அதே நாளில் கோட்ட அலுவலகங்கள் முன்பு சத்தியாகிரக போராட்டம் நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரஜ்வல் பாலியல் வன்கொடுமை: பாதிக்கபட்டோர் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

படிக்காத பக்கங்கள் படத்தின் டிரெய்லர்

அனுபமா பரமேஸ்வரனின் புதிய பட அறிவிப்பு!

தமிழ்நாட்டில் 104 நீதிபதிகள் இடமாற்றம்!

பகலறியான் படத்தின் டீசர்

SCROLL FOR NEXT