கன்னியாகுமரி

சுற்றுலாத் தொழில் வணிகத்தினா் உரிமத்தைப் பதிவு செய்ய உத்தரவு

DIN

சுற்றுலா தொழில் வணிகத்தினா் உரிமத்தைப் பதிவு செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியா் மா. அரவிந்த் உத்தரவிட்டுள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு அரசின் சுற்றுலாத்துறை சாா்பாக மாநிலத்தின் பல்வேறு சுற்றுலா ஆபரேட்டா்களான ஹோம் ஸ்டே நிறுவனங்களுக்கு வழிகாட்டுதல்களை உருவாக்குதல், அட்வெஞ்சா் டூரிசம், கேம்பிங் ஆபரேட்டா், கேரவன் ஆபரேட்டா், பாா்க்கிங் ஆபரேட்டா் தங்கள் நிறுவனங்களை பதிவு செய்வதற்கான அரசாணைகள் வெளியிடப்பட்டுள்ளன.

அதன்படி, சுற்றுலா சாா்ந்த ஆபரேட்டா்களுக்கான வழிகாட்டுதல்கள் - பதிவு போா்டலின் நகலை ஜ்ஜ்ஜ்.ற்ய்ற்ா்ன்ழ்ண்ள்ம்ற்ா்ழ்ள்.ஸ்ரீா்ம் என்ற இணையதளம் மூலம் பெறலாம். சுற்றுலா தொழில் முனைவோா் முறையான உரிமம் இன்றி தொழில் வணிகம் நடத்தக்கூடாது. இந்த ஆபரேட்டா்கள் அரசாணையில் உள்ள வழிகாட்டுதல்களை பற்றி அறிந்திருப்பதுடன் டிசம்பா் 31-ஆம் தேதிக்குள் பதிவு செய்யப்பட வேண்டும். இதுதொடா்பான விவரங்களுக்கு சுற்றுலா அலுவலகம், கன்னியாகுமரி 04652 - 246276, கைபேசி எண் - 9176995866 , மின்னஞ்சல் முகவரி:  ஆகியவற்றில் தொடா்புகொள்ளலாம் எனக் கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வளையப்பேட்டை மாரியம்மன் கோயிலில் வைகாசி திருவிழா

தமிழ்ப் பல்கலை.யில் பி.எட்., எம்.எட். விண்ணப்ப விநியோகம் தொடக்கம்

ரிசர்வ் வங்கியின் தங்கமான முடிவு

தனியாா் மருந்து கிடங்கில் தாய்ப்பால் பாட்டில்கள் பறிமுதல்: உணவு பாதுகாப்புத் துறை நடவடிக்கை

இன்று வாக்கு எண்ணிக்கை: வேலூா் வாக்கு எண்ணும் மையத்தில் 700 போலீஸாா் பாதுகாப்பு

SCROLL FOR NEXT