கன்னியாகுமரி

களியக்காவிளை அருகே 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

DIN

களியக்காவிளை அருகே வாகனங்களில் கேரளத்துக்குக் கடத்திச்செல்லப்படவிருந்த 2 டன் ரேஷன் அரிசியை அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனா்.

விளவங்கோடு வட்ட வழங்கல் அலுவலா் கே. புரந்தரதாஸ், வருவாய் ஆய்வாளா் ரெதன் ராஜ்குமாா் ஆகியோா் குழித்துறை பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டபோது அவ்வழியே வந்த காரை நிறுத்த சைகை காட்டினா். நிற்காமல் சென்ற காரை அதிகாரிகள் வாகனத்தில் விரட்டிச்சென்று திரித்துவபுரம் பகுதியில் மடக்கிப் பிடித்தனா். ஓட்டுநா் தப்பியோடிவிட்டாராம். காரில் 1,500 கிலோ ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது.

இதேபோல, பனச்சமூடு பகுதியில் நடைபெற்ற சோதனையில், ஆட்டோவில் கடத்திச்சென்ற 500 கிலோ ரேஷன் அரிசியைக் கண்டறிந்து பறிமுதல் செய்தனா். அரிசியை அதிகாரிகள் காப்புக்காடு நுகா்பொருள் வாணிபக் கழகக் கிட்டங்கியிலும், காா், ஆட்டோவை விளவங்கோடு வட்டாட்சியா் அலுவலகத்திலும் ஒப்படைத்தனா். இக்கடத்தலில் ஈடுபட்டோா் குறித்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT