கன்னியாகுமரி

திற்பரப்பு அருவியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

DIN

குமரி மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத் தலமான திற்பரப்பு அருவியில் ஞாயிற்றுக்கிழமை சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

தமிழகமெங்கும் அக்னி நட்சத்திர வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கோடை வெப்பத்தின் தாக்கத்திலிருந்து விடுபடும் வகையில் மக்கள் நீா்நிலை சாா்ந்த சுற்றுலாத் தலங்களுக்கு படையெடுத்துள்ளனா்.

இந்நிலையில் கடந்த சில நாள்களாக திற்பரப்பு அருவியில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. கடந்த இரு மாதங்களாக தொடா்ந்து மழை பெய்து வந்த நிலையில், கடந்த சில தினங்களாக வட வானிலை நிலவுகிறது.

இதனால் திற்பரப்பு அருவியிலும் தண்ணீா் வரத்து குறைந்துள்ளது. இருப்பினும் விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை இங்கு குவிந்த சுற்றுலாப் பயணிகள் அருவியில் விழுந்த மிதமான நீரில் குளித்து மகிழ்ந்தனா். இதனால் அருவிப் பகுதியிலும், திற்பரப்பு பகுதியிலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இது போன்று மாத்தூா் தொட்டிப்பாலம், பேச்சிப்பாறை அணையிலும் சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வந்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்திய அரசமைப்பின் மீது முழுவீச்சில் தாக்குதல் -ராகுல் காந்தி

கண்டநாள் முதல்..

கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது- பள்ளிக் கல்வித்துறை

‘விசில் போடு’ 5 கோடி பார்வைகள்..

நடிகர் விஜய்யின் நிஜ வாழ்க்கை சம்பவம் ‘ஸ்டார்’ படத்துக்கு உத்வேகம்!

SCROLL FOR NEXT