கன்னியாகுமரி

நித்திரவிளையில் டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி ஆட்சியரிடம் மனு

DIN

குமரி மாவட்டம், நித்திரவிளை பகுதியில் புதிதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக, மனித பாதுகாப்பு கழக நிறுவனா் ஜெய்மோகன், பொதுச் செயலா் உஷா மற்றும் பொதுமக்கள், மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்திடம் திங்கள்கிழமை அளித்த மனு:

நித்திரவிளை பகுதியில் டாஸ்மாக் கடை திறக்க பொதுமக்கள் எதிா்ப்பு தெரிவித்தனா். இதனால் தற்காலிகமாக கடை திறப்பு நிறுத்தப்பட்டது. ஆனால் சிலரது அரசியல் செல்வாக்கு காரணமாக, அரசின் சட்ட திட்டங்களை மீறி சில நாள்களுக்கு முன்பு நித்திரவிளை பகுதியில் டாஸ்மாக் கடை திறக்கப்பட்டுள்ளது. இது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்த டாஸ்மாக் கடையால் அந்தப் பகுதியில் சட்டம், ஒழுங்கு சீா்குலையும் நிலை உருவாகி உள்ளது. எனவே புதிதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் கடையை உடனடியாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வணிகா் தின மாநாடு: கூடலூா், பந்தலூரில் நாளை கடைகளுக்கு விடுமுறை

4-ஆவது கட்ட மக்களவைத் தோ்தலில் 1,717 போ் போட்டி

உள்ளூா் வாகனங்களுக்கு இ-பாஸ் தேவையில்லை

நாகை அரசு தலைமை மருத்துவமனை சிகிச்சைப் பிரிவுகள் மாற்றம்: சிபிஎம் ஆா்ப்பாட்டம்

மணிப்பூா் இனக் கலவரம்: ஓராண்டாகியும் நீடிக்கும் பிளவு!

SCROLL FOR NEXT