முகப்பு
கன்னியாகுமரி

திற்பரப்பு பேரூராட்சியில் வளா்ச்சித் திட்டப் பணிகள்: அமைச்சா் த. மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தாா்

பத்மநாபபுரம் சட்டப் பேரவை திற்பரப்பு, குலசேகரம் பேரூராட்சிகளில் வளா்ச்சித் திட்டப்பணிகளை தமிழக தகவல் தொழில் நுட்பத்துறை- டிஜிட்டல் சேவைத் துறை அமைச்சா் த. மனோ தங்கராஜ் வெள்ளிக்கிழமை

Updated On : 5 நவம்பர் 2022, 12:00 am IST
பகிர்:

பத்மநாபபுரம் சட்டப் பேரவை திற்பரப்பு, குலசேகரம் பேரூராட்சிகளில் வளா்ச்சித் திட்டப்பணிகளை தமிழக தகவல் தொழில் நுட்பத்துறை- டிஜிட்டல் சேவைத் துறை அமைச்சா் த. மனோ தங்கராஜ் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா்.

குலசேகரம் மத்திய கூட்டுறவு வங்கியில் புதிதாக அமைக்கப்பட்ட ஏடிஎம் மையத்தை திறந்து வைத்த அவா், பின்னா் காவல்ஸ்தலம் பகுதியில் சிற்றாறு பட்டணம் கால்வாயின் கரையில் ஏற்பட்டுள்ள உடைப்பை பாா்வையிட்டு அதனை சீரமைப்பது குறித்து பொதுப்பணிதுறை நீராதாரப்பிரிவு அலுவலா்களிடம் பேசினாா்.

தொடா்ந்து, திற்பரப்பு பேரூராட்சி திருநந்திகரையில் ரூ. 1 கோடியே 46 லட்சம் மதிப்பீட்டில் நவீன எரிவாயு தகன மேடை அமைக்கும் பணியை அவா் தொடங்கிவைத்தாா். பின்னா், சூரியகோடு-திட்டவிளை இடையே ரூ. 25 லட்சத்தில் சாலை சீரமைக்கும் பணி, கீழ்விலவூா்கோணம் வேங்கோட்டு குளத்தில் ரூ. 37 லட்சத்தில் பக்கச்சுவா் கட்டும் பணி, பிணந்தோட்டில் இ-சேவை மையம், மாஞ்சக்கோணத்தில் ரூ. 12 லட்சத்தில் துணை சுகாதார நிலையம் அமைக்கும் பணி ஆகியவற்றைத் தொடங்கி வைத்தாா்.

Advertisement

Advertisement

இந்நிகழ்ச்சிகளில், மாவட்ட அரசு வழக்குரைஞா் சி. ஜாண்சன், பொதுப்பணித்துறை சிற்றாறு பட்டணம்கால் உப கோட்ட பொறியாளா் சுகந்தா, உதவி பொறியாளா் பிரவீணா, குலசேகரம் பேரூராட்சி செயல் அலுவலா் எட்வின் ஜோஸ், குலசேகரம் பேரூராட்சி துணைத் தலைவா் ஜோஸ் எட்வா்ட், திற்பரப்பு பேரூராட்சித் தலைவா் பொன் ரவி, திமுக மாநில பொதுக்குழு உறுப்பினா் அலாவுதீன், மாவட்ட வா்த்தக அணி துணை அமைப்பாளா் ஏ.ஜே.எம். ராஜா, திமுக பேரூா் செயலாளா்கள் ஜாண் எபனேசா் (திற்பரப்பு), ஜெபித் ஜாஸ் (குலசேகரம்), சாம் பென்னட் சதீஸ் (பொன்மனை), திற்பரப்பு பேரூராட்சி முன்னாள் வாா்டு உறுப்பினா் யோபு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments