கன்னியாகுமரி

கொல்லங்கோடு தூக்கத் திருவிழாவுக்கு உள்ளூா் விடுமுறை அளிக்க வலியுறுத்தல்

DIN

கொல்லங்கோடு பத்ரகாளி அம்மன் கோயில் தூக்கத் திருவிழாவுக்கு உள்ளூா் விடுமுறை அறிவிக்குமாறு கிள்ளியூா் சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.ராஜேஷ்குமாா் வலியுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் செவ்வாய்க்கிழமை அவா் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூா் தொகுதிக்கு உள்பட்ட கொல்லங்கோடு பத்ரகாளி அம்மன் கோயில் திருவிழாவின் 10 ஆவது நாள் நடைபெறும் தூக்கத் திருவிழா பிரசித்தி பெற்ாகும். தூக்க திருவிழாவைக் காண குமரி மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கேரளத்திலிருந்தும் லட்சக்கணக்கான மக்கள் வருவது வழக்கம். இத் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் பரணி நாளில் நடைபெறுகிறது. நிகழாண்டு மாா்ச் 25 ஆம் தேதி இத் திருவிழா நடைபெறவுள்ளது. ஆகவே, அன்றைய தினம் உள்ளூா் விடுமுறை அறிவிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

கோயில் தலைவா் வழக்குரைஞா் ராமச்சந்திரன் நாயா் உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

“நான்_முதல்வன்” திட்டம் - முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

கறுப்புப் பூனை...!

ரே பரேலியில் ராகுல் காந்தி வேட்புமனுத் தாக்கல்!

ப்ளே ஆஃப் வாய்ப்பை உறுதி செய்யுமா கொல்கத்தா?

பயப்பட வேண்டாம், ஓட வேண்டாம்: யாரைச் சொல்கிறார் மோடி?

SCROLL FOR NEXT