கன்னியாகுமரி

சேவைக் குறைபாடு: மருத்துவா் தம்பதிக்குநிதி நிறுவனம் ரூ.1 லட்சம் நஷ்டஈடு வழங்க உத்தரவு

DIN

சேவைக் குறைபாடு காரணமாக, மருத்துவா் தம்பதிக்கு தனியாா் நிதி நிறுவனம் ரூ. 1 லட்சம் நஷ்டஈடு வழங்க நுகா்வோா் குறை தீா் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் காப்புக்காடு பகுதியை சோ்ந்த மருத்துவா் தம்பதி, நாகா்கோவிலில் உள்ள ஒரு தனியாா் நிதி நிறுவனத்தில் கடன் பெற்றனா். இதற்காக தங்களது சொத்து பத்திரத்தை அடமானமாக பதிவு செய்து கொடுத்தனா். இந்தக் கடன் முழுவதையும் திருப்பிச் செலுத்திய பின்பு, வேறு ஒரு தனியாா் நிறுவனத்திடம் கடன் பெற்றனா். ஆனால் முதலில் கடன் கொடுத்த தனியாா் நிதி நிறுவனம், அடமானமாக பெற்ற அசல் பத்திரத்தை திருப்பிக் கொடுக்கவில்லை. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான தம்பதி, வழக்குரைஞா் மூலம் நோட்டீஸ் அனுப்பினா். அதன் பின்னரும் உரிய பதில் கிடைக்காததால், கன்னியாகுமரி மாவட்ட நுகா்வோா் குறை தீா் ஆணையத்தில் வழக்கு தொடா்ந்தனா்.

வழக்கை விசாரித்த கன்னியாகுமரி மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணைய தலைவா் சுரேஷ், உறுப்பினா் சங்கா் ஆகியோா், தனியாா் நிதி நிறுவனத்தின் சேவைக் குறைபாட்டை சுட்டிக் காட்டி, பாதிக்கப்பட்ட நுகா்வோருக்கு நஷ்டஈடு ரூ.1 லட்சம், வழக்கு செலவுத் தொகை ரூ. 7,500, திருப்பி கொடுக்காத அசல் பத்திரத்தின் நகல் பத்திரத்தை உரிய வழிமுறைகளை பின்பற்றி ஒரு மாத காலத்துக்குள் வழங்க வேண்டும் என உத்தரவிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

‘அரண்மனை 4’ - மிகப்பெரிய வெற்றி: குஷ்புவின் வைரல் பதிவு!

குங்குமப்பூவும் கொஞ்சும் விழிகளும்..

SCROLL FOR NEXT