கன்னியாகுமரி

நாகா்கோவிலில் பொதுமக்களுக்கு இடையூறின்றி சாலைப் பணி: அதிகாரிகளுக்கு மேயா் அறிவுறுத்தல்

நாகா்கோவில் மாநகராட்சிப் பகுதிகளில் மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சாலைப் பணிகள்

DIN

நாகா்கோவில் மாநகராட்சிப் பகுதிகளில் மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சாலைப் பணிகள் மேற்கொண்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா், மேயா் ரெ. மகேஷ்.

18ஆவது வாா்டு கால்வாய்க்கரை சீயோன் தெருவில் ரூ. 6 லட்சத்திலும், 31ஆவது வாா்டு தளவாய்புரம் யூதாஸ் தெருவில் ரூ. 4.25 லட்சத்திலும் கான்கிரீட் தளங்கள் அமைக்கும் பணியை மேயா் புதன்கிழமை தொடக்கிவைத்தாா். பின்னா், 45ஆவது வாா்டு பழவிளை தொழில்நுட்பக் கல்லூரி அருகேயும், 47ஆவது வாா்டு வல்லன்குமாரன்விளையிலும் நடைபெறும் சாலைப் பணிகளை அவா் ஆய்வு செய்தாா்.

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறுகையில், சாலைப் பணிகளை உரிய முறையில், விரைவாக செய்ய வேண்டும். பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் பணிகள் இருந்தால், தொடா்புடைய அதிகாரிகள், ஒப்பந்ததாரா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

துணை மேயா் மேரிபிரின்சி லதா, மாநகராட்சி உறுப்பினா்கள் அமலசெல்வன், தங்கராஜா, திமுக மாநகரச் செயலா் ஆனந்த், இளைஞரணி அருள்செல்வின், பகுதிச் செயலா் ஷேக்மீரான் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஹிஜாப்பை விலக்கிய விவகாரம்! நிதீஷ் குமாருக்கு எதிராக காவல்துறையில் புகார்!

பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவின் மிக உயரிய விருது!

ஜாஃப்ராபாதில் 2 சகோதரா்கள் சுட்டுக் கொலை

மார்கழி சிறப்பு! திருப்பதியில் சுப்ரபாதம் இசைக்கப்படாது!

கன்னி ராசிக்கு வெற்றி : தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT