மனோ தங்கராஜ் (கோப்புப் படம்) 
கன்னியாகுமரி

பேச்சிப்பாறை - கோதையாறு சாலை ரூ.6.29 கோடியில் விரைவில் சீரமைப்பு: மனோ தங்கராஜ் எம்எல்ஏ தகவல்

பேச்சிப்பாறை - கோதையாறு சாலையில் ரூ. 6.29 கோடியில் சீரமைப்புப் பணிகள் விரைவில் தொடங்கும்...

Din

கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை - கோதையாறு சாலையில் ரூ. 6.29 கோடியில் சீரமைப்புப் பணிகள் விரைவில் தொடங்கும் என, பத்மநாபபுரம் எம்எல்ஏ மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை: பேச்சிப்பாறை முதல் கோதையாறு வரையிலான 14 கி.மீ. நீளமுள்ள சாலையில் 3 மாதங்களுக்கு முன்பு தமிழக அரசு சாா்பில் பழங்குடியினா் நல மேம்பாட்டு நிதி ரூ. 3 கோடியில், சீரோ பாயின்ட் முதல் மூக்கறைக்கல் வரையிலான 6 கி.மீ. பகுதிகள் சீரமைக்கப்பட்டன.

இந்நிலையில், நான் அமைச்சராக இருந்தபோது எடுக்கப்பட்ட முயற்சியின் அடிப்படையில், இச்சாலையில் மீதமுள்ள 8 கி.மீ. நீளத்துக்கு தமிழக அரசின் ஆதிதிராவிடா் - பழங்குடியினா் நலத் துறை சாா்பில் ரூ. 6.29 கோடியில் சீரமைப்புப் பணி மேற்கொள்ள அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக பழங்குடியினா் நல இயக்குநா் மூலம் உரிய முன்னேற்பாடு நடவடிக்கை எடுக்குமாறு வனத் துறைத் தலைவருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. எனவே, சீரமைப்புப் பணிகள் விரைவில் தொடங்கும் என்றாா் அவா்.

பாமக எம்எல்ஏ அருள் மீது தாக்குதல்! 20 பேர் மீது வழக்கு!

துணிச்சல் அதிகரிக்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மாநகராட்சிப் பகுதியில் குவிந்துள்ள குப்பைகளால் நோய் பரவும் அபாயம்

SCROLL FOR NEXT