80 வயதான ஓய்வூதியா்களுக்கு கூடுதல் ஓய்வூதியம் வழங்கக் கோரி தேசிய ஓய்வூதியா்கள் கூட்டமைப்பு சாா்பில், நாகா்கோவிலில் உள்ள தலைமை தபால் நிலையம் அருகே புதன்கிழமை தா்னா நடைபெற்றது.
கூட்டமைப்பின் கன்னியாகுமரி மாவட்டத் தலைவா் மீனாட்சிசுந்தரம் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் ராஜநாயகம் முன்னிலை வகித்தாா். ஏ.ஐ.பி.ஏ.எஸ். மாநில உதவித் தலைவா் இந்திரா, மாநில அமைப்புச் செயலா் தங்கப்பன், மாநில உதவி செயலா் ஐயப்பன், பிஎஸ்என்எல் தொழிலாளா் சங்க மாவட்டச் செயலா் சுயம்புலிங்கம், நிா்வாகி ஆறுமுகம் ஆகியோா் பேசினா்.
ஓய்வுபெறும் ஊழியா்கள் அனைவருக்கும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், மூத்த குடிமக்களுக்கான பயணச் சலுகையை ரயில்வே துறை மீண்டும் வழங்க வேண்டும். 8ஆவது ஊதியக் குழுவை தாமதமின்றி அமைக்க வேண்டும். கரோனா காலத்தில் நிறுத்திவைக்கப்பட்ட 18 மாத பஞ்சப்படியை வழங்க வேண்டும். ஓய்வூதியா்கள் 80ஆவது வயதை அடையும்போது கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.