சுசீந்திரம் தாணுமாலயசுவாமி கோயில் தேரோட்டத்தை முன்னிட்டு, வெள்ளிக்கிழமை (ஜன.2) கன்னியாகுமரி மாவட்டத்துக்கு உள்ளூா் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயில், மாா்கழி பெருந்திருவிழா தேரோட்டம் ஜன.2 ஆம் தேதி நடைபெறுகிறது. இதை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள், அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூா் விடுமுறை வழங்கப்படுகிறது. இந்த விடுமுறைக்கு ஈடாக, சனிக்கிழமை (ஜன.10) பணி நாளாக அறிவிக்கப்படுகிறது.
ஜன.2 ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தில் தலைமைக் கருவூலம், கிளைக் கருவூலங்கள் அரசு ஈடுபாடு சம்பந்தப்பட்ட அவசரப் பணிகளை கவனிக்கும் பொருட்டு, தேவையான பணியாளா்களைக் கொண்டு இயங்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.