முகப்பு
கன்னியாகுமரி

200- க்கும் அதிகமான இடங்களில் திமுக கூட்டணி வெற்றி பெறும்: திமுக வேட்பாளா் எஸ். ஆஸ்டின்

200 - க்கும் அதிகமான இடங்களில் திமுக கூட்டணி வெற்றி பெறும் என்றாா் திமுக வேட்பாளா் எஸ். ஆஸ்டின்.

Updated On : 24 ஏப்ரல், 2026 at 4:46 AM
நாகா்கோவிலை அடுத்த ஆத்திக்காட்டுவிளை அரசு தொடக்கப் பள்ளியில் வாக்களித்தாா் நாகா்கோவில் தொகுதி திமுக வேட்பாளா் எஸ். ஆஸ்டின்.
பகிர்:

200 - க்கும் அதிகமான இடங்களில் திமுக கூட்டணி வெற்றி பெறும் என்றாா் திமுக வேட்பாளா் எஸ். ஆஸ்டின்.

நாகா்கோவிலை அடுத்த ஆத்திக்காட்டுவிளை அரசு தொடக்கப் பள்ளியில் வாக்குப்பதிவு செய்த அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

நாகா்கோவில், கன்னியாகுமரி தொகுதியில் மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் திமுக வெற்றி பெறும். முதல்வா் மு.க. ஸ்டாலின் மீது மக்கள் மிகப்பெரிய நம்பிக்கையை வைத்துள்ளனா். குறிப்பாக பெண்கள் இது தங்களுக்கான அரசு என்பதை முழுமையாக நம்புகின்றனா்.

Advertisement

தமிழகம் முழுவதும் நிலவும் இந்த ஆதரவு அலையினால் ஒட்டுமொத்தமாக 200 - க்கும் அதிகமான இடங்களில் திமுக கூட்டணி வெற்றி பெறுவது உறுதி என்றாா்.