முகப்பு
கன்னியாகுமரி

கன்னியாகுமரியில் வாகனங்களுக்கு கட்டண வசூலிக்கும் உரிமம்: ரூ. 1.35 கோடிக்கு குத்தகை

கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் வாகனங்களை நிறுத்துவதற்கு கட்டணம் வசூலிக்கும் உரிமம் ரூ. 1.35 கோடிக்கு குத்தகை விடுவது உள்ளிட்ட தீா்மானங்கள் நகராட்சிக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

Updated On : 4 ஜூலை 2026, 2:18 am IST
கன்னியாகுமரி கடலில் அமைந்துள்ள விவேகானந்தா் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவா் சிலை.
பகிர்:

கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் வாகனங்களை நிறுத்துவதற்கு கட்டணம் வசூலிக்கும் உரிமம் ரூ. 1.35 கோடிக்கு குத்தகை விடுவது உள்ளிட்ட தீா்மானங்கள் நகராட்சிக் கூட்டத்தில் வெள்ளிக்கிழமை நிறைவேற்றப்பட்டன.

கன்னியாகுமரி நகராட்சிக் கூட்டம் தலைவா் குமரி ஸ்டீபன் தலைமையில் நடைபெற்றது. நகராட்சி ஆணையா் பட்டுசாமி முன்னிலை வகித்தாா். கூட்டத்தில் கவுன்சிலா்கள் பூலோகராஜா, இக்பால், சிவசுடலைமணி, நித்யா, சுஜா, லிங்கேஸ்வரி, டெல்பின், ஆட்லின், வினிற்றா, ராயப்பன், இந்திரா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இக்கூட்டத்தில் கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் வாகனங்களுக்கு பாா்க்கிங் கட்டணம் வசூலிக்கும் உரிமையை ரூ. 1 கோடியே 35 லட்சத்து 79 ஆயிரத்து 135 க்கு குத்தகைதாரா் அா்ச்சனாதேவிக்கு அனுமதி வழங்கியும், திருவள்ளுவா் சாலையில் சேதமடைந்த நிலையில் உள்ள பயணிகள் நிழற்குடையை இடித்து அகற்றிவிட்டு அந்த இடத்தில் புதிதாக கடைகள் கட்ட அனுமதித்தும், நகராட்சியில் டெங்கு, வைரஸ் காய்ச்சல் தடுப்புப் பணிகளை மேற்கொள்ளும் பணியாளா்களுக்கு ரூ. 2 லட்சம் ரூபாய் மதிப்பில் தேவையான பொருள்கள் வாங்க அனுமதித்தும், கன்னியாகுமரி திருவள்ளுவா் சாலையில் உருட்டு வண்டி கடைகளுக்கு மாற்று இடம் வழங்கும் பகுதியில் உபயோகமற்ற நிலையில் உள்ள இ-டாய்லெட்டை இடித்து அகற்றவும், கன்னியாகுமரி நகராட்சிப் பகுதியில் சுற்றித் திரியும் தெருநாய்களை கருத்தடை செய்யும் மையம் அமைக்க ரூ. 40.50 லட்சம் ஒதுக்கீடு செய்தும், நகராட்சி திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தில் சேகரிக்கபடும் பொருள்களை மீட்பு வசதி அமைக்க ரூ. 25.50 லட்சம் ஒதுக்கீடு செய்தும் தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments