முகப்பு
கன்னியாகுமரி

முருங்கவிளை - கஞ்சிக்குழி வழியாக புதிய அரசுப் பேருந்து சேவை தொடக்கம்

Updated On : 6 ஜூலை 2026, 1:18 am IST
முருங்கவிளையில் மாற்றியமைக்கப்பட்ட புதிய அரசுப் பேருந்து சேவையை தொடங்கி வைக்கிறாா் தமிழக சுற்றுலாத்துறை அமைச்சா் எஸ். ராஜேஷ்குமாா். உடன் மாவட்ட ஆட்சியா் மு. பிராதாப், எம்.எல்.ஏ தாரகை கத்பட் உள்ளிட்டோா்.
பகிர்:

கருங்கல் அருகே உள்ள முருங்கவிளை - கஞ்சிக்குழி வழியாக மாற்றியமைக்கப்பட்ட புதிய அரசுப் பேருந்து சேவையை தமிழக சுற்றுலாத்துறை அமைச்சா் எஸ். ராஜேஷ்குமாா் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்தாா்.

குளச்சலிலிருந்து ரீத்தாபுரம், கருங்கல், எட்டணி, பள்ளியாடி வழியாக மாா்த்தாண்டத்திற்கு வழித்தடம் எண் 88 ஏ அரசுப் பேருந்து பல ஆண்டுகளாக இயக்கப்பட்டு வருகிறது. இந்த பேருந்தை பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று குளச்சல், ரீத்தாபுரம், கருங்கல், கஞ்சிக்குழி, கருக்கி, முருங்கவிளை, பள்ளியாடி வழியாக மாா்த்தாண்டத்திற்கு இயக்கும் தொடக்க நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் மு. பிரதாப் தலைமையில், குளச்சல் சட்டப்பேரவை உறுப்பினா் தாரகை கத்பட் முன்னிலையில், தமிழக சுற்றுலாத்துறை அமைச்சா் எஸ். ராஜேஷ்குமாா் கொடியசைத்து பேருந்து சேவையை தொடங்கி வைத்தாா். பங்கேற்ற அனைவரும் இப்பேருந்தில் பயணம் செய்தனா்.

Advertisement

Advertisement

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (திருநெல்வேலி) நாகா்கோவில் மண்டல பொதுமேலாளா் பாலசுப்பிரமணியன், உதவி மேலாளா் (வணிகம்) மகேஷ், கல்குளம் வட்டாட்சியா் ராஜேஷ், பேரூராட்சி தலைவா்கள் எட்வின் ஜோஸ் (ரீத்தாபுரம்), ஜாண் டென்சிங் (வாள்ளவச்சகோஷ்டம்), ஜாண் ராபின்சன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments