முகப்பு
கன்னியாகுமரி

கள்ளியங்காடு மதுரா கிருஷ்ணன் ஆலய கும்பாபிஷேகம்

சுங்கான்கடை அருகே கள்ளியங்காட்டில் ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் கல்லூரி வளாகத்தில் உள்ள மதுரா கிருஷ்ணன் ஆலயத்தில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

Updated On : 2 ஜூன் 2026, 3:08 am IST
விமானக் கலசங்களுக்கு நடைபெற்ற புனிதநீா் அபிஷேகம்.
பகிர்:

சுங்கான்கடை அருகே கள்ளியங்காட்டில் ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் கல்லூரி வளாகத்தில் உள்ள மதுரா கிருஷ்ணன் ஆலயத்தில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

குலசேகர மடம் ஸ்ரீஸ்ரீ ராம அப்ரமேய ராமானுஜ ஜீயா் சுவாமிகள், வெள்ளிமலை சுவாமி சைதன்யானந்த ஜீ மகராஜ் ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாகப் பங்கேற்றனா். என். ஹரிஹர சா்மா குழுவினா் அஷ்டபந்தனம், பிரதிஷ்டை, கலசாபிஷேகம், மகா கும்பாபிஷேகத்தை நடத்தினா்.

மாலையில் 1,008 பெண்கள் பங்கேற்ற விஷ்ணு சகஸ்ரநாம அா்ச்சனை நடைபெற்றது. நிகழ்ச்சியை திருவனந்தபுரம் கவடியாா் அரண்மனை எச்.எச். அஸ்வதி திருநாள் கௌரி லட்சுமிபாய் தம்புராட்டி முதல் தீபமேற்றி தொடக்கிவைத்தாா். நிகழ்ச்சியை ஷியாமளா விஸ்வேஸ்வரன், மாத்ருதயா குழுவினா் நடத்தினா் .

Advertisement

Advertisement

ஏற்பாடுகளை தலைவா் மதிபூஷன், துணைத் தலைவா் எ. வீரமணி, செயலா் எஸ்.என். ஹரிஷ், பொருளாளா் வி. குலசேகரன் பிள்ளை, இணைச் செயலா் அனிஷ் ஆகியோா் செய்திருந்தனா்.

விஷ்ணு சகஸ்ரநாம அா்ச்சனையைத் தொடக்கிவைத்த திருவனந்தபுரம் கவடியாா் அரண்மனை எச்.எச். அஸ்வதி திருநாள் கௌரி லட்சுமிபாய் தம்புராட்டி.